For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவ்வளவு படபடப்பு.. தமிழக டிஜிபி மாறியது கூட தெரியாமல் கடிதம் எழுதிய பீட்டா!

பீட்டா அமைப்பு காவல்துறை இயக்குநர் பெயரில் ஓய்வு பெற்ற தமிழக முன்னாள் டிஜிபி அசோக்குமார் பெயர் இடம் பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்பட

Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டை தடைசெய்யக்கோரி பீட்டா அமைப்பு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் காவல்துறை இயக்குநர் பெயரில் ஓய்வு பெற்ற தமிழக முன்னாள் டிஜிபி அசோக்குமார் பெயர் இடம் பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவில்லை. இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த அனுமதி கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

 Peta writes letter to former DGP Ashok kumar to stop Jallikattu

இதனிடையே, ஜல்லிக்கட்டுத் தொடர்பாக பீட்டா இந்தியாவின் செயல் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திநாதன் மற்றும் டிஜிபி அசோக்குமார் ஆகியோருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளது. அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு முழுமையாக தடை விதித்து அமல்படுத்த வேண்டும்.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடுத்துபவர்களை கைது செய்ய வேண்டும். மேலும், தமிழக அரசு ஜல்லிக்கட்டை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

இந்த கடிதத்தில், டிஜிபி அசோக்குமாரின் பெயர் இடம்பெற்றுள்ளது. தற்போது தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் இருக்கிறார். டிஜிபி அசோக்குமார் கடந்தாண்டு ஓய்வு பெற்று விட்டார். டிஜிபி அசோக்குமார் மாறிவிட்டார் என்பது கூட தெரியாமல் பீட்டா அமைப்பு அவரின் பெயரில் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Peta writes letter to Tamilnadu government to stop Jallikattu. In that letter peta Mentioning former DGP Ashok kumar names. But he retired last years itself. without knowing that peta writes letter to him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X