முன்பதிவு செய்தால் பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி... மத்திய அரசு பரிசீலனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : முன்பதிவு செய்தால் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை வீட்டிற்கே கொண்டு வந்து தருவது பற்றி பரிசீலித்து வருவதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெட்ரோலிய அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்க்-குகள் மூடப்படும் என்ற சில விநியோகஸ்தர்களின் அறிவிப்பை மத்திய அரசு ஆதரிக்கவோ, ஏற்கவோ இல்லை.

 Petro products may be door delivered to consumers on pre booking

மேலும் முன்பதிவு முறையில் பெட்ரோலியப் பொருட்களான டீசல், பெட்ரோல் உள்ளிட்டவற்றை நுகர்வோருக்கு டெலிவரி செய்ய முடியுமா என்று பரிசீலித்து வருவதாக பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பெட்ரோல் பங்க்-குகளில் நீண்ட வரிசையில் நின்று நுகர்வோரின் நேரம் வீணாகாமல் தடுக்க முடியும் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அதில் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
petroleum ministry neither endorses nor approves of move by small section of dealers to keep their petrol pumps closed on Sundays
Please Wait while comments are loading...