இன்னும் 10 நாட்களே.. பெட்ரோல் விலை செஞ்சுரி அடிக்கும்.. எச்சரிக்கை விடுக்கும் பொருளாதார நிபுணர்கள்
பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து அதிக விலையில் விற்கிறது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்னும் 10 நாட்களில் 100 ரூபாயை தொடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்து இருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இன்னும் அதிக உயர்வு ஏற்படும் என்று பொருளாதர நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் ஏற்பட்டு அதிகரித்தது.

காரணம் என்ன
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றிக்கொள்ளலாம் கூறிய பின் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. இதனால் தினமும் 50 பைசா வீதம் பெட்ரோல் விலை உயர்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 4 ரூபாய் உயர்ந்தது.

இப்போது என்?
பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்ந்தது. தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.86காசுகளாகும். டீசல் விலை 56 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.88காசுகளாகும்.மும்பையில் பெட்ரோல் விலை 88.50 ரூபாய்க்கு விற்கிறது. இந்தியாவிலேயே அங்குதான் பெட்ரோல் விலை அதிக அளவில் விற்கிறது.

கெடு
இந்த நிலையில்தான் இந்தியாவில் பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொடும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதார கொள்கை காரணமாக, தொடர் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, கண்டிப்பாக இன்னும் 10-12 நாட்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை அடையும் என்று கூறியுள்ளனர்.

100ஐ தொடும்
அதன்படி பெட்ரோல் விலையில் இரண்டு வாரங்களில் மும்பையில் முதலில் செஞ்சுரி அடிக்கும். இப்போது அங்கு பெட்ரோல் விலை 88 ரூபாய் உள்ளது. இன்னும் 12 நாடகளில் 10 ரூபாய் வரை விலை உயரும், சமயத்தில் ஒரே நாளில் இரண்டு ரூபாய் வரை விலை உயரும் என்றும் கூறியுள்ளனர். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் என்ன?
ஆனாலும் சென்னியில் 100 ரூபாயை தொட 20 நாட்களாவது ஆகும் என்று கூறியுள்ளனர். இதே பொருளாதார நிலை நீடித்தால் 20 நாட்களில் சென்னையில் பெட்ரோல் விலை 100 ரூபாயும், டீசல் விலை 88 ரூபாயும் அடையும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications