ராமதாஸ் சொன்ன மாதிரியே நடந்து விட்டது.. கர்நாடக தேர்தலுக்குப் பிறகு உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!

Written By: Staff
Subscribe to Oneindia Tamil
  பெட்ரோல், டீசல் விலை உயர்வு | டாஸ்மாக் வழக்கில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு- வீடியோ

  சென்னை: 19 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

  பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வந்தன. ஆனால் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.

   Petrol, diesel prices hiked

  இதற்கு கர்நாடக தேர்தலே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், அதை உண்மையாக்கும் விதமாக, கர்நாடகாவில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

  இதன்படி, இன்று காலை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 18 காசு உயர்ந்து 77 ரூபாய் 61 காசாகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து, 69 ரூபாய் 79 காசாகவும் விற்பனையாகிறது.

  பொதுமக்கள் நலன் கருதியே விலை மாற்றம் செய்யவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் கூறினாலும், கர்நாடக தேர்தல் முடிந்தபிறகு விலையை அதிகரித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Petrol, diesel price hiked after karnataka assembly election.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற