தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படைதுப்பாக்கி சூடு நடத்தியது தப்பு.. ஹைகோர்ட்டில் வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்தி பேச வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினர்-வீடியோ

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படைக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நவம்பர் 13 திங்கள் கிழமை அன்று பிற்பகல் 4 மணி அளவில், இந்தியக் கடலோரக் காவல்படையினர், ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

Plea filed in High court over Indian Navy's shoot out

அதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் என்பவருக்கு இடது கை மணிக்கட்டுக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது. அதே ஊரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மீனவரின் இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது. மீனவர்களை கடலோர காவல் படையினர் மேலும் லத்திக் கம்பால் அடித்துத் துன்புறுத்தி உள்ளனர்.

இலங்கை கடற்படையினர்தான் தமிழக மீனவர்களை தாக்கி கைது செய்வது நடந்து வந்த நிலையில், இப்போது நமது நாட்டு கடலோர காவல் படையினரும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை தாக்குதல் நடத்தியது பற்றி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி வழக்கறிஞர் மெளரியா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்ய, மீனவ சங்கத்துக்கும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Plea filed in High court over Indian Navy's shoot out on TN fishermen.
Please Wait while comments are loading...