என் வீட்டில் வந்து ஓய்வெடுங்கள்... கருணாநிதிக்கு மோடி அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  என் வீட்டில் வந்து ஓய்வெடுங்கள்... கருணாநிதிக்கு மோடி அழைப்பு- வீடியோ

  சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது வீட்டில் வந்து ஓய்வெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

  சென்னையில் நடைபெற்ற தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பின்னர் எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற திருமண விழாவில் அவர் பங்கேற்றார்.

  இதைத்தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிவிலால் புரோகித்தும் கோபாலபுரத்திற்கு சென்றார்.

  பொன்னாடை அணிவித்து வரவேற்பு

  பொன்னாடை அணிவித்து வரவேற்பு

  மேலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் கோபாலபுரத்துக்கு சென்றனர். பிரதமர் மோடியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வீட்டு வாசலிலேயே வரவேற்றனர்.

  மோடி நலம் விசாரிப்பு

  மோடி நலம் விசாரிப்பு

  இதைத்தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது முரசொலி பவள விழா மலரை கருணாநிதி பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

  என் வீட்டில் ஓய்வெடுங்கள்

  என் வீட்டில் ஓய்வெடுங்கள்

  அதனை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை டெல்லியில் உள்ள தனது வீட்டில் வந்து ஓய்வெடுக்குமாறு அழைப்பு விடுத்தார். இதனை உறுதி செய்த திமுக எம்பி கனிமொழி திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றார்.

  மரியாதை நிமித்தமான சந்திப்பு

  மரியாதை நிமித்தமான சந்திப்பு

  திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பிரதமர் மோடிக்கு எம்பி கனிமொழி நன்றி தெரிவித்தார். மரியாதை நிமித்தமாகதான் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தார் என்றும் கனிமொழி கூறினார்.

  அழகிரியை தொடர்ந்து மோடி

  அழகிரியை தொடர்ந்து மோடி

  அண்மையில் முக முத்துவின் பேரன் திருமணத்தில் கலந்துகொண்ட அழகிரி தனது தந்தையான கருணாநிதியை மதுரையில் வந்து ஓய்வெடுக்குமாறு அழைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Prime Minister Modi invites DMK leader Karunanidhi to take rest in his Delhi house. PM Modi has met DMK leader Karunanidhi in his Gopalapuram house.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற