அப்துல் கலாம் நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க ஜெயலலிதா இல்லையே... மேடையில் வருத்தப்பட்ட மோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம் : ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அப்துல் கலாம் மணி மண்டபத்தை சிறப்பாக கட்டி முடித்த தொழிலாளர்களை சிறப்பாக பாராட்டியிருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ராமேஸ்வரத்தை அடுத்த பேக்கரும்பில் ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மணி மண்டபத்தை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

PM Narendra Modi remembered Jayalalitha at stage

அப்துல் கலாமின் நினைவுச் சின்னத்தை அமைக்க ஏராளமானோர் அயராது உழைத்தனர். இந்தப் பணியை செய்துமுடித்த அனைத்து பணியாளர்களுக்கும் நான் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் கைதட்டி அவர்களின் மிகச் சிறப்பான பணிக்காக இந்த பாராட்டை தெரிவிக்கலாம் என்று கூறி கை தட்டினார்.

அப்துல் கலாமின் நினைவுச் சின்னத்தை திட்டமிட்டபடி முடிப்பதற்காக இரண்டு மணி நேரம் கூடுதலாக நேரம் பார்த்து தங்களது பணியை முடித்துள்ளனர். அதற்காகத் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் கூட வாங்கவில்லை. இதற்கான அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்ட வேண்டும்.

Abdul Kalam has no major contribution, says Pak scientist AQ Khan

முன்னாள் முதல்வர் 'அம்மா' ஜெயலலிதா இந்த நிகழ்ச்சி மேடையில் இருந்திருந்தால் தொழிலாளர்களின் இந்தப் பணியை வெகுவாகப் பாராட்டியிருப்பார். இந்த விழாவில் பங்கேற்க ஜெயலலிதா இல்லையே என்பதை நினைக்கும் போதே வருத்தமாக உள்ளது என்று உருக்கமாக பேசினார் மோடி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If Jayalalitha is alive she would praised the workers who involved in constucting Abdul kalam's memorial, i am feeling her absence, PM Modi says in Rameswaram function.
Please Wait while comments are loading...