For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா.. எடப்பாடியாருக்கு ராமதாஸ் கடும் கண்டனம்

பெண்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக முதல்வர் பழனிசாமி பேசியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : மதுக்கடைக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றவை என்றும் மகளிர் ஃபேஷனுக்காக போராட்டம் நடத்துவதாக பெண்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் முதல்வர் பழனிசாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்களில் பெரும்பாலானவை இட்டுக்கட்டிய பொய்கள் ஆகும்.

PMK founder Ramadoss slams CM Palanisamy over female protestors comment

உண்மையில் சாமளாபுரம் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் எந்த வகையான அத்துமீறலிலும் ஈடுபடவில்லை. சூலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அவ்வழியே சென்ற போது அவரது மகிழுந்தை பொதுமக்கள் மறித்து, அவரிடம் தங்களின் குறைகளைக் கூறினார்கள். அவரும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தமது ஆதரவை தெரிவித்தார். கோபத்தைத் தூண்டும் வகையில் அங்கு எந்த நிகழ்வும் நடக்காத நிலையில் தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன? சாலையோரத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்த பெண்ணின் கன்னத்தில் அறைய வேண்டிய தேவை என்ன?

இந்த நிகழ்வில் பத்திரிகையாளர்களும் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வழியே சென்று கொண்டிருந்த அப்பாவி ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். சிலருக்கு மண்டை உடைந்திருக்கிறது. இதையெல்லாம் மறைத்து விட்டு, காவல்துறையினர் அமைதியின் திருவுருவமாக காட்சியளித்தது போன்றும் பொதுமக்கள் தான் அராஜகத்தில் ஈடுபட்டதைப் போலவும் சித்தரிப்பது முதலமைச்சரின் பதவிக்கு அழகல்ல. இந்தத் தாக்குதலுக்கு காரணமான காவல் அதிகாரி மீது துறை சார்ந்த விசாரணைக்கு ஆணையிடப் பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் மூலம் தெரிவித்த அரசு, அந்த விசாரணை அறிக்கையை வெளியிடாமல் அவருக்கு பதவி உயர்வு வழங்கியது நியாயமா?

அதேபோல், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளுக்கும், மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கும் எதிராக அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்துவதையும் அவர் கொச்சைப்படுத்தி உள்ளார். கதிராமங்கலத்தில் எண்ணெய்க் குழாய்கள் அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் இப்போது போராட்டம் நடத்துவது ஏன்? என்று முதலமைச்சர் வினா எழுப்பியிருப்பது அபத்தமானது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அனுபவித்து வந்த சுற்றுச்சூழல் உள்ளிட்ட பாதிப்புகள் தான் அவர்களை இப்போது போராடத் தூண்டியிருக்கிறது. பல நாள் கொந்தளிப்பு தான் ஒரு நாள் போராட்டமாக வெடிக்கும் என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாததல்ல.

அன்றாடம் உழைத்தால் தான் உணவு என்ற நிலையில் உள்ள மக்கள் தான் தங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக கடைசி முயற்சியாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு போராட்டம் என்பது பொழுதுபோக்கல்ல. எனவே, பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாமல் மதுவிலக்கு கோரிக்கையாக இருந்தாலும், கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கிணறுகளை மூடும் கோரிக்கையாக இருந்தாலும் அதை அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
PMK founder Ramadoss condemns the statement of CM Palanisamy about female protestors in assembly and also urges to fullfill people's demand
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X