
உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே நிற்போம்.. அன்புமணி
சென்னை: சட்டசபைத் தேர்தலைப் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்துப் போட்டியிடும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை அரும்பாக்கம், எம்எம்டிஏ பகுதியில் வாக்காளர்களுக்கு பாமக சார்பில் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

ராமதாஸ் பேசுகையில், சட்டசபைத் தேர்தல் நேர்மையாக, நியாயமாக சுதந்திரமாக நடைபெறவில்லை. தேர்தல் ஆணையம் செயல்படவே இல்லை. கடந்த முறையைவிட இந்த முறை 500 மடங்கு ஊழல் அதிகரிக்கும் என்றார்.
டாக்டர் அன்புமணி பேசுகையில், வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்துப் போட்டியிடும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் கோரிக்கை. தமிழர்களின் உணர்வுகளை முதல்வர் ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அன்புமணி.