For Quick Alerts
For Daily Alerts
கோபாலபுரம் வீட்டை சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு.. இரும்பு தடுப்புகள் போடப்பட்டது

காவிரி மருத்துவமனை அறிக்கை | கருணாநிதி இல்லத்திற்கு பாதுகாப்பு- வீடியோ
சென்னை: கோபாலபுரத்திற்கு செல்லும் சாலைகளை இரும்பு தடுப்புகளை கொண்டு தடுத்து போக்குவரத்து சீராக செல்ல காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தொண்டர்கள் அதிக அளவில் குவிந்துள்ளதால், கருணாநிதி வீட்டை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்களும் கோபாலபுரம் இல்லத்தின் முன்பு குவிந்து செய்திகளை உடனுக்குடன் அளித்து வருகிறார்கள். இதனால் கோபாலபுரம் இல்லத்தை சுற்றிலும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இதனிடையே இன்று காலை மு.க.ஸ்டாலின், இதையடுத்து துரைமுருகன் உள்ளிட்டோர் கோபாலபுரம் இல்லம் வந்தனர். கருணாநிதி மகளும், ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி டெல்லியில் இருந்து வீட்டுக்கு செல்கிறார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!