சென்னை கொட்டிவாக்கத்தில் வயதான தம்பதி வெட்டிக் கொலை - வடமாநில இளைஞர் கைது
சென்னை கொட்டிவாக்கத்தில் வயதான தம்பதி வெட்டிக் கொலை - வடமாநில இளைஞர் கைது
Recommended Video

சென்னை : சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வந்த வயதான தம்பதியினர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆலம் என்கிற வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொட்டிவாக்கம் ராமலிங்கபுரத்தில் வசித்து வருபவர் மாயாண்டி. இவரது மனைவி வள்ளிநாயகி. இவர்களது மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே தனியாக வசித்து வந்தனர்.

நேற்று காலை வெகுநேரம் ஆகியும் இவர்கள் தங்கி இருந்த வீட்டின் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது அங்கு மாயாண்டி, வள்ளிநாயகி இருவரும் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர்.
இதனையடுத்து துரைப்பாக்கம் போலீஸுக்கு தகவல் தரப்பட்டதை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடல்களை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கொலை நடந்த வீட்டிற்கு அருகே இருந்த சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆராய்ந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், அங்கு இளைஞர் ஒருவர் நடமாடியது தெரியவந்தது.
விசாரணையில் அவர் பெயர் ஆலம் என்பதும், வடமாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி என்பதும், சென்னையில் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தவர் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரித்ததில் அவர் இரண்டு கொலைகளையும் செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் வாக்குமூலத்தில், தான் மாயாண்டி வீட்டிற்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்தததாகவும், வேலை முடிந்தும் பேசிய பணத்தை தராமல் அலைக்கழித்ததால், மாயாண்டி மற்றும் வள்ளிநாயகி இருவரையும் அடித்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 13 சவரன் தங்க நகையை எடுத்துச் சென்றதாகவும் ஆலம் ஒப்புக்கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications