For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி விற்பனை! பொறிவைத்து பிடித்த போலீஸ்!

சென்னையில் ஆட்டுக்கறியுடன் பூனை கறி பிரியாணி விற்பதாக எழுந்துள்ள புகார் அசைவ பிரியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி விற்பனை

    சென்னை ஆட்டுக்கறியுடன் பூனை கறி பிரியாணி விற்பதாக எழுந்துள்ள புகார் அசைவ பிரியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் காக்கா பிரியாணி விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஆட்டுக்கறி எனக்கூறி நாய்கறி விற்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

    இதனால் அசைவ பிரியர்கள் பலர் சாலையோர கடைகளில் சாப்பிடவும், சிக்கன் மற்றும் மட்டன் இறைச்சிகளை வாங்கவும் பெரும் அச்சமடைந்தனர்.

    பூனைக்கறி பிரியாணி

    பூனைக்கறி பிரியாணி

    இந்நிலையில் அசைவ பிரியர்களை மீண்டும் பீதியடைய செய்யும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி போடப்படுவது தெரியவந்துள்ளது.

    மாயமான பூனைகள்

    மாயமான பூனைகள்

    சென்னையில் கடந்த சில மாதங்களாக பல இடங்களில் பூனைகள் நடமாட்டமே இல்லாமல் போனது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னை மயிலாப்பூர், அண்ணாநகர், கோட்டூர்புரம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் சுற்றித்திரிந்த பூனைகள் திடீரென மாயமாகின.

    போலீஸ்க்கு ரகசிய தகவல்

    போலீஸ்க்கு ரகசிய தகவல்

    இதில் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனைகளும் மாயமானது சந்தேகத்தை எழுப்பியது. இந்நிலையில் சென்னை செங்குன்றம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி பரிமாறப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    பொறிவைத்து பிடித்த போலீஸ்

    பொறிவைத்து பிடித்த போலீஸ்

    இதையடுத்து அந்த ஹோட்டல்களுக்கு சாப்பிட செல்வதை போல சென்ற போலீசார் பூனை சப்ளை செய்ய வந்த கும்பலை பொறி வைத்து பிடித்தனர். அவர்களை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    சாக்குமூட்டையில் பூனைகள்

    சாக்குமூட்டையில் பூனைகள்

    இதில் பூனை சப்ளை செய்த கும்பல் செங்குன்றத்தில் தங்கியிருக்கும் நாடோடிகள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த இடத்தில் சோதனை செய்த போலீசார் சாக்குமூட்டையில் கட்டப்பட்டிருந்த 12 பூனைகள் பறிமுதல் செய்தனர்.

    பூனைக்கறி கிலோ ரூ.100

    பூனைக்கறி கிலோ ரூ.100

    அவற்றில் 4 பூனைகள் இறந்து போயிருந்தது. ஆட்டுக்கறி விலை கிலோ 600 ரூபாய்க்கு மேல் விற்பதால் கிலோ 100 ரூபாய்க்கு விற்கும் பூனைக்கறியை வாங்க ஹோட்டல்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மக்கள் அச்சம்

    மக்கள் அச்சம்

    சாலையோர சாப்பாட்டு கடைகள் மட்டுமின்றி பெரிய பெரிய ஹோட்டல்களிலும் பூனைக்கறியை கலந்து மட்டன் பிரியாணி தயாரிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் ஹோட்டல்களில் பிரியாணி வாங்கி சாப்பிட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    English summary
    Police has arrested a team who supplied cat to hotels. In Chennai many hotels mixing cat meat with mutton and selling as mutton briyani.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X