For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொள்ளை சம்பவம் எதிரொலி: நெல்லையில் வடமாநிலத்தவர்களை கணக்கெடுக்கும் போலீசார்!

நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தையடுத்த நெல்லையில் உள்ள வட மாநிலத்தவர்களை போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை அருகே நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் வேலை பார்க்கும் வடமாநிலத்தவர்களை போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள அழகர் நகைக்கடையில் கடந்த 24ஆம் தேதி கொள்ளையர்கள் புகுந்து 37 கிலோ வரையிலான தங்கம்,வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

Police starts counting North state employees in Tamilnadu

கொள்ளை நடந்த அடுத்த நாளான 25ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கொள்ளையர்கள் சென்ற வேனை போலீசார் மடக்கினர். அப்போது காருடன் நகை மற்றும் பணத்தை விட்டு வி்ட்டு கொள்ளையர்கள் தப்பினர்.

இருப்பினும் போலீசார் விரட்டி சென்றதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் தலைவன் காலித் ஷேக் என்பவர் பிடிப்பட்டார். மற்ற நான்கு பேர் தப்பி சென்றனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் தப்பி ஓடிய நான்கு பேரும் சொந்த மாநிலத்திற்கு செல்லவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் அவர்கள் ஆந்திரா, கர்நாடக, ஓரிசா மாநிலங்களில் பதுங்கியிருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர்.

ராஜஸ்தான், பீகார், ஓரிசா மாநிலத்தை சேர்ந்த பலர் குடும்பத்துடனும், தனியாகவும் வந்து தமிழகத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் அதிகம் பேர் சென்னையில் தங்கியுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

இவர்களில சிலர் கும்பலாக நகை கடை, சீட்டு கடைகளில் கொள்ளையடித்து வி்ட்டு சொந்த மாநிலத்திற்கு தப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் இவர்களை குற்றங்களை தடுக்க தற்போது வடமாநிலத்தவர்களை நெல்லை போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.

English summary
Police starts counting North state employees in Tamilnadu after the theft of Nella Jwellory shop.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X