ஆட்சிக்கு ஆபத்து என்றால் அனைவரும் ஒன்றாகிவிடுவோம்: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று துணை சபாநாயகர் ஜெயராமன் பேட்டியளித்தார். அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக பல கருத்துக்களை எடுத்து வைத்தார். போராட்டங்களை தூண்டிவிட்டு ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

அதிமுக பிரச்சினை குறித்தும், அவர் பேசினார். அவர் கூறியதாவது: ஜனநாயக ரீதியான கட்சியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும் இணைவதும் சகஜம். தாயிடம் கோபம் கொண்டு திரும்பி வரும் குழந்தை போல பிரிந்து சென்றவர்கள் வருவார்கள்.

Pollachi Jayaraman slams MK Stalin for his comment on the AIADMK government

ஜெயலலிதா மறைவால் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் மனம் பேதலித்துள்ளனர். எனவேதான் என்ன செய்வது என்று தெரியாமல் ஏதோ செய்துகொண்டுள்ளார்கள்.

இன்று மாலைக்குள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஆட்சிக்கு ஆபத்து என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவோம். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் முதலமைச்சர் அணிக்கு வருவார்கள். எடப்பாடி அரசுக்கு 134 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.
சட்டசபையில் பெரும்பான்மையை ஏற்கனவே நிரூபித்துவிட்டோம். எனவே மீண்டும் அதற்கு தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dy speaker Pollachi Jayaraman says Edappadi Planisamy government has full majority and need not to prove again.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற