மறைந்த தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மனைவி மாரியம்மாள் காலமானார்
மறைந்த தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மனைவி மாரியம்மாள் நேற்று காலமானார்.
கோவை: மறைந்த தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மனைவி மாரியம்மாள் (வயது 89) நேற்று காலமானார்.
தமிழகத்தின் முதன்மை தொழில் நிறுவனமான சக்தி குழும நிறுவனங்களின் தலைவராக, கல்வியாளராக, ஆன்மீகவாதியாக, காந்தியவாதியாகவும் திகழ்ந்தவர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம். 1923ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி பொள்ளாச்சியில் பிறந்த நா. மகாலிங்கம், கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி காந்தி பிறந்த நாளில் சென்னையில் வள்ளலார் குறித்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போதே காலமானார். வாழ்நாள் முழுவதும் காந்திய கொள்கைகளை கடைபிடித்த பெருமகனார் பொள்ளாச்சி மகாலிங்கம், மகாத்மா காந்தியின் பிறந்த நாளிலேயே காலமானார்.

மறைந்த பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மனைவி மாரியம்மாள் (வயது 89) நேற்று பொள்ளாச்சியில் காலமானார். அவரது உடலுக்கு தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இன்று அஞ்சலி செலுத்தினர்.
ஒன் இந்தியா இணைய குழும நிறுவனர் பி.ஜி. மகேஷ், மாரியம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஏறத்தாழ 70 ஆண்டுகாலம் காந்தியவாதியான மகாலிங்கத்துடன் மாரியம்மாள் பயணித்த நாட்கள் மிக அற்புதமானவை. சக்தி குழுமங்களில் பல்வேறு சமூகப் பணிகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் மாரியம்மாள் என்கின்றனர் சக்தி குழுமங்களின் ஊழியர்கள்.
[READ THIS: தொழிலதிபர் பொள்ளாச்சி என். மகாலிங்கம் மரணம் - சொற்பொழிவின்போது மேடையில் உயிர் பிரிந்தது]
பொள்ளாச்சியில் பள்ளி கல்வி முடித்தவுடன் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டத்தைப் பெற்ற பின், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படித்தார் மகாலிங்கம். இதன்பிறகு, மிகவும் விரும்பி தனது அத்தை மகள் மாரியம்மாளை 1945ம் ஆண்டு மணமுடித்துக்கொண்டார்.
சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் தொழில் தொடங்குவதற்கு மத்திய அரசு அழைத்தபோது, தொழில் முனைவோராக தன்னை மாற்றிக் கொண்டு பல்வேறு தொழில்களில் தடம் பதித்தார் பொள்ளாச்சி மகாலிங்கம். மகாலிங்கம்-மாரியம்மாள் தம்பதிக்கு மாணிக்கம், பாலசுப்ரமணியம், சீனிவாசன் ஆகிய மூன்று மகன்களும், கருணாம்பாள் என்ற மகளும் உள்ளனர்.
மாரியம்மாள் காலமானது குறித்து நம்மிடம் பேசிய ஊழியர்கள், தந்தை நாச்சி முத்து கவுண்டர் நகராட்சி தலைவராக இருந்ததால் பொள்ளாச்சி மகாலிங்கம் அய்யாவுக்கு இயல்பிலேயே அரசியல் ஆசை இருந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றிய இவர் 1952, 1957, 1962 என மூன்று முறை பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். அவருடைய அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்தவர் மாரியம்மாள்.
கணவரின் குறிப்பறிந்து செயல்படுவதில் அவருக்கு நிகராக யாரையும் கூற முடியாது. வீட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்பதிலும் உபசரிப்பதிலும் அவருக்கு நிகர் அவர்தான். அதனால்தான், முதுமை காலத்திலும் ஓய்வெடுக்காமல் தொடர்ச்சியாக சமூகம், ஆன்மிகம், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆர்வமுடன் பங்கேற்று வந்தார். அவருடைய வழியிலேயே மாரியம்மாளின் பயணமும் அமைந்தது. சக்தி சர்க்கரை ஆலை, சக்தி மென்பானங்கள், சக்தி சோயா ஆலை, சக்தி ஆட்டோ மொபைல்ஸ், சக்தி பைனான்ஸ், ஏபிடி டிரான்ஸ்போர்ட், ஏபிடி பார்சல் சர்வீஸ்.... என அவரது தொழில் சக்தி, பெரும் சாம்ராஜ்யமாக விரிவடைந்தது.
அவருக்குப் பிறகு மகள் கருணாம்பாளின் கணவர் கிருஷ்ணராஜ் வானவராயர், மகன்கள் மாணிக்கம், பாலசுப்ரமணியம், சீனிவாசன் ஆகியோர் தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடக உட்பட வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தங்களது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினர். கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம்கள், கோவில் திருப்பணிகள் என அனைத்து சமூக சேவை நடவடிக்கைகளிலும் மகாலிங்கம்-மாரியம்மாள் மணிவிழா அறக்கட்டளை ஈடுபட்டு வந்தது. இந்தப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் மாரியம்மாள். அவரைப் போல் ஒருவரைப் பார்ப்பது அரிது" என்கின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications