For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கல்: சென்னை டூ நெல்லை, நாகர்கோவிலுக்கு 22 சிறப்பு ரயில்கள்: முன்பதிவு இன்று துவக்கம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 19 ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று துவங்குகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாகவும் சென்னை எழும்பூர்-திருநெல்வேலி, நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள், அதிவிரைவு சிறப்பு ரயில்கள், பிரீமியம் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ரயில்களின் விவரம் வருமாறு,

Pongal: 22 special trains between Chennai, Tirunelveli, Nagercoil

திருநெல்வேலி-எழும்பூர்

திருநெல்வேலி-எழும்பூர் சிறப்பு ரயில் (வ.எண்.06001), திருநெல்வேலியில் இருந்து வருகிற 8-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06002), எழும்பூரில் இருந்து வருகிற 9-ந் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலிக்கு அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு செல்லும்.

இதேபோல், திருநெல்வேலி-எழும்பூர் சிறப்பு ரயில் (06003), திருநெல்வேலியில் இருந்து வருகிற 9-ந் தேதி இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.55 மணிக்கு எழும்பூர் வந்துசேரும். மறுமார்க்கமாக எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06004), எழும்பூரில் இருந்து வருகிற 10-ந் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.

நாகர்கோவில்-எழும்பூர்

நாகர்கோவில்-எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (06005), நாகர்கோவிலில் இருந்து வருகிற 11-ந் தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரயில் (00601), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 12-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (06006), திருநெல்வேலியில் இருந்து வருகிற 12-ந் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரயில் (00602), எழும்பூரில் இருந்து வருகிற 13-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (06007), திருநெல்வேலியில் இருந்து வருகிற 14-ந் தேதி காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரயில் (00603), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 14-ந் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.

எழும்பூர்-திருநெல்வேலி

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் பிரீமியம் சிறப்பு ரயில் (06004), திருநெல்வேலியில் இருந்து வருகிற 17-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06008), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 18-ந் தேதி இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.

நாகர்கோவில்-சென்னை எழும்பூர் பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரயில் (00605), நாகர்கோவிலில் இருந்து வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.

அதிவிரைவு சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06009), எழும்பூரில் இருந்து வருகிற 19-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (06010), திருநெல்வேலியில் இருந்து வருகிற 19-ந்தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை சென்னை எழும்பூருக்கு 7.20 மணிக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06011), எழும்பூரில் இருந்து வருகிற 20-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.

திருநெல்வேலி

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06012), திருநெல்வேலியில் இருந்து வருகிற 22-ந்தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06013), திருநெல்வேலியில் இருந்து வருகிற 23-ந்தேதி இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

நாகர்கோவில்-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06014), நாகர்கோவிலில் இருந்து வருகிற 25-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

டிக்கெட் முன்பதிவு

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06015), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 26-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06016), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 27-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.

மேற்கூறப்பட்ட அனைத்து ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

பிரீமியம் ரயில்

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி பிரீமியம் சிறப்பு ரயில் (00606), எழும்பூரில் இருந்து வருகிற 23-ந் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது.

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி பிரீமியம் சிறப்பு ரயில் (00607), எழும்பூரில் இருந்து வருகிற 24-ந் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி செல்லும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வருகிற 9-ந் தேதி தொடங்கும்.

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் பிரீமியம் சிறப்பு ரயில் (00608), திருநெல்வேலியில் இருந்து வருகிற 26-ந் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வருகிற 11-ந் தேதி தொடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Southern railway has announced 22 trains between Chennai, Tirunelveli and Nagercoil ahead of Pongal. Reservation starts today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X