சென்னை வந்தார் பிரதமர் மோடி- ஆளுநர் பன்வாரிலால், பாஜக நிர்வாகிகள் வரவேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கருணாநிதியை பிரதமர் மோடி திடீரென சந்திப்பது ஏன்? பரபர பின்னணி- வீடியோ

  சென்னை: தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை காலை சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால், தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற உள்ள திருமண விழாவில் மோடி பங்கேற்கிறார்.

  Prime Minister Narendra Modi to visit Chennai Today

  இதனைத் தொடர்ந்து சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த இரு நிகழ்ச்சிகளையும் நிறைவு செய்த பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலாபுரம் இல்லத்தில் மோடி பிற்பகல் 12.30 மணிக்கு சந்திக்கிறார்.

  பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Prime Minister Narendra Modi to visit Chennai today. He will participate in the diamond jubilee celebrations of Daily Thanthi newspaper

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற