For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிடிவி தினகரனுக்கு எதிராக வெடித்த போராட்டம் - உருவ பொம்மை எரிப்பு

அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. தினகரனின் உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டம் செய்கின்றனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளர்களாக டிடிவி தினகரன் நியமித்துள்ளதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் உருவபொம்மையை எரித்து போராடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் டி டி வி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த திருப்போரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர கோதண்டபாணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறுவபொம்மையை எரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாமல்லபுரம் அடுத்த அம்பாள் நகர் அவரது இல்லம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுவிப்பு. கரூர் மாவட்ட செயலாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக ஏழுமலை எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக எம்எல்ஏ செந்தமிழன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் காமராஜ் நீக்கம்

அமைச்சர் காமராஜ் நீக்கம்

திருவாரூர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் காமராஜ் நீக்கம்; புதிய செயலாளராக எஸ். காமராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் கே.சி.வீரமணி விடுவிக்கப்பட்டு புதிய செயலாளராக எம்எல்ஏ பாலசுப்பிரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினகரன் ஆதரவாளர்கள்

தினகரன் ஆதரவாளர்கள்

புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வைரமுத்து விடுவிப்பு; புதிய செயலாளராக பரணி கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளராக எம்எல்ஏ கோதண்டபாணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் விடுவிக்கப்பட்டு, திருவான்மியூர் முருகன், குடவாசல் ராஜேந்திரன் மற்றும் கல்லூர் வேலாயுதம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பேனர் கிழிப்பு

பேனர் கிழிப்பு

மன்னார்குடியில் அதிமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சசிகலா பேனர் கிழிக்கப்பட்டது. மேலும் டி.டி.வி தினகரனின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

உருவபொம்மை எரிப்பு

உருவபொம்மை எரிப்பு

வேலூரில் டி.டி.வி தினகரன் உருவப்பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர்,திருப்பத்தூரிலும் டி.டி.வி தினகரன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

அதிமுக தொண்டர்கள்

அதிமுக தொண்டர்கள்

குடியாத்தம் ஒன்றிய அதிமுக சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் டி.டி.வி.தினகரன் உருவபொம்மையை தீயிட்டு கொழுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட அதிமுக கட்சி தொண்டர்கள் ஈடுபட்டனர்.

செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்

செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்

கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த தமிழக போக்குவரத்து துதை அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்கி விட்டு முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியை கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக கட்சியின் துணை பொதுசெயலாளர் தினகதன் அதிவித்ததை தொடத்ந்து செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் கரூர் பேருந்து நிலைய ரவுண்டான அருகே பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி 100க்கும் மேற்பட்டோர் கொண்டாடினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாப்பூரில் கைது

மயிலாப்பூரில் கைது

மயிலாப்பூர் லஸ் கார்னரில் டி.டி.வி தினகரன் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தினகரன் உருவ பொம்மை எரித்தனர். உருவ பொம்மை எரித்த 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூரில் போராட்டம்

திருவாரூரில் போராட்டம்

திருவாரூரில் டிடிவி.தினகரனின் உருவ பொம்மையை எரித்து அமைச்சர் காமராஜின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து காமராஜ் நீக்கப்பட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விஜயாஸ்கர் ஆதரவார்கள் கொதிப்பு

விஜயாஸ்கர் ஆதரவார்கள் கொதிப்பு

கரூர் மாவட்ட செயலாளராக செந்தில் பாலாஜியை ஏற்க முடியாது என அவைத்தலைவர் காளியப்பன் தெரிவித்துள்ளார். விஜயபாஸ்கர் தான் கரூர் மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் செந்தில் பாலாஜியை ஏற்கவில்லை எனவும் கூறியுள்ளார். தினகரனுக்கு எதிராக மாநிலம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

English summary
ADMK cadres are potesting againt Sasikala and DInakaran all over the state
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X