For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜபக்சே வருகையைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 26–ந்தேதி ஆர்ப்பாட்டம்: பழ.நெடுமாறன்

By Mathi
Google Oneindia Tamil News

Protests all over TN against Rajapaksa's participation in Modi ceremony: Nedumaran
சென்னை: நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 26-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி வருகிற 26-ந் தேதி பதவி ஏற்க உள்ளார். இதில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு தமிழக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ராஜபக்சே வருகையை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 26-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நான் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறேன். தஞ்சையில் ரயில் நிலையம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் அயனாவரம் முருகேசன் தலைமை ஏற்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
World Tamil Movement leader Pazha Nedumaran has announced protests all over TN against Rajapaksa's participation in Modi's swearing-in ceremony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X