சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிக்கு பேட்டரி கார் வழங்க மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிக்கு பேட்டரி கார் வழங்க மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1 முதல் 4-ஆம் நடைமேடை வரை மாற்றுத்திறனாளிகளுக்காக பேட்டரி கார் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக 5 முதல் 9-ஆம் நடைமேடை வரை பேட்டரி கார் இயக்கப்படுவதில்லை.

 Railway administration denied battery car for the disabled person in Chennai Egmore

இந்த பேட்டரி காரை தனியார் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களுக்காக இலவசமாக இயக்கி வருகின்றன. இதற்கான டிரைவர்களையும் அந்த நிறுவனங்களே நியமிக்கும்.

இதனிடையே 5-ஆவது நடைமேடையில் பேட்டரி கார் இயக்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று நீதிமன்றத்தில் ரயில்வே நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்தவர் தீபக்நாதன். மாற்றுத்திறனாளியான இவர் சென்னையிலிருந்து திருச்சிக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் செல்லவிருந்தார். இந்த ரயிலானது 5-ஆவது நடைமேடையிலிருந்து செல்லும்.

இதனால் ரயில்வே நிர்வாகத்திடம் பேட்டரி கார் வேண்டும் என்று தீபக்நாதன் கேட்டதற்கு 5-ஆவது நடைமேடைக்கு பேட்டரி கார் கிடையாது என்று ரயில்வே நிர்வாகம் மறுத்துவிட்டது. எனினும் அவருக்கு சக்கர நாற்காலியாவது வழங்கியிருக்கலாம். அதையும் வழங்கவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே உயரதிகாரிகள் மாற்றுத் திறனாளிக்கு பேட்டரி காருக்கு பதில் மாற்று ஏற்பாடுகளை செய்யத் தவறிய ஊழியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A disabled person was denied by railway authorities to use battery car for 5 th platform in Chennai Egmore Railway station.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற