சென்னையில் பரவலாக மழை.. வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர், கிண்டி, தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும்.

 Rain lashes in chennai, t.nagar and other areas

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

Chennai Rain Creates Record On 7CM In An Hour-Oneindia Tamil

இந்நிலையில் சென்னை எழும்பூர், கிண்டி, தி.நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மாலையில் மழை பெய்தது. அதேபோல் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சாந்தோம், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் லேசான மழைக்கு கூட தாங்காத சென்னை சாலையால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Today evening Rain lashes in chennai, t.nagar and other areas
Please Wait while comments are loading...