தேர்தல் நடந்தால் திமுகவே வெல்லும்.. ரஜினியால் ஒரு பாதிப்பும் வராது.. நக்கீரன் சர்வே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி வருகையால் திமுகவுக்குப் பாதிப்பு வராது என்று நக்கீரன் சர்வே கூறியுள்ளது.

நக்கரீன் இதழ் எடுத்த சர்வேயில் ரஜினிகாந்த்துக்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் மற்ற கட்சிகளுக்குப் பாதிப்பு வந்தாலும் ரஜினிக்குப் பாதிப்பு வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுவுக்கு 37% ஆதரவு

திமுவுக்கு 37% ஆதரவு

ஆண், பெண், இளைஞர்கள், முதியவர்கள் என ஒட்டுமொத்தமாக பலரிடமும், இப்போது தேர்தல் வந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் எனக் கேட்டதற்கு, தி.மு.க என 37 சதவிகிதம் பேர் தெரிவித்தனர். தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி 5% ஆதரவைப் பெறுகிறது. இதே கூட்டணி நீடித்தால் அதன் கூட்டணி பலம் 42% ஆகும். இது 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளை வென்ற அ.தி.மு.க.வின் பலத்திற்கு இணையானது.

ரஜினிக்கு 21%

ரஜினிக்கு 21%

ரஜினி அரசியலுக்கு வந்தால் உங்கள் ஓட்டு யாருக்கு என்பதை ஒட்டுமொத்த பொதுமக்களிடமும் முன்வைத்தபோது, அவருக்கான செல்வாக்கு 21% என்ற அளவில் வெளிப்பட்டது. ரஜினி இன்னமும் அரசியலுக்கு வருவது உறுதியாகாத நிலையில், அவர் மீதான எதிர்பார்ப்பின் அடையாளமாக இந்த சதவீதம் அமைந்துள்ளது.

அதிமுகவுக்கு 25%

அதிமுகவுக்கு 25%

ரஜினி அரசியலுக்கு வராத நிலையில், அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளோர் எண்ணிக்கை 25%. இதில் 5% பேர் ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாக்களிப்போம் என்கிறார்கள். தி.மு.க. தரப்பில் இத்தகையவர்களின் எண்ணிக்கை 6% ஆக உள்ளது. எனினும், மற்ற கட்சிகளை விட தி.மு.க. பெற்றுள்ள முன்னிலையில் பாதிப்பில்லை.

பிற கட்சிகளிலிரும் ரஜினி ஆதரவாளர்கள்

பிற கட்சிகளிலிரும் ரஜினி ஆதரவாளர்கள்

அதேபோல் காங்கிரஸிலிருந்து 1%, பா.ஜ.க.விலிருந்து 2%, தே.மு.தி.க.விலிருந்து 1% எனப் பல கட்சியின் ஆதரவாளர்களிடமிருந்தும் ரஜினிக்கு ஆதரவு திரும்புகிறது. பிரதான கட்சிகளைத் தவிர்த்த மற்ற கட்சிகளை ஆதரிப்போரிலிருந்தும் 2% பேர் ரஜினி பக்கம் திரும்புகிறார்கள். "எங்களுக்கு யார்மீதும் நம்பிக்கையில்லை' என நோட்டா பக்கம் செல்பவர்களில் 3% பேர் "ரஜினி வந்தால் வாக்களிப்போம்' என்கிறார்கள்.

நாம் தமிழர் மட்டும் உறுதி

நாம் தமிழர் மட்டும் உறுதி

ரஜினியின் அரசியல் வருகையை பா.ம.க தலைமை எதிர்க்கின்ற நிலையில் அக்கட்சியின் ஆதரவாளர்களில் 1% பேர் ரஜினிக்கு ஆதரவு தெரிவிக்கின்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ரஜினியை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதையும் அறிய முடிந்தது. அவர்கள் தரப்பிலிருந்து ரஜினியின் அரசியல் வருகைக்குத் துளியும் ஆதரவில்லை.

விடுதலைச் சிறுத்தைகளிலும் ரஜினி ஆதரவு இல்லை

விடுதலைச் சிறுத்தைகளிலும் ரஜினி ஆதரவு இல்லை

ரஜினியின் வருகையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை வரவேற்றுள்ள நிலையிலும், அவர்களின் வாக்கு வங்கியாக உள்ளவர்கள் யாரும் ரஜினிக்குத் தனிப்பட்ட ஆதரவைத் தெரிவிக்காமல், தங்கள் கட்சிக்கான ஆதரவிலேயே நிலைத்திருப்பதையும் சர்வேயில் காண முடிந்தது.

ஓட்டுப் போடத் தயக்கம்

ஓட்டுப் போடத் தயக்கம்

அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் ரஜினிக்கு வாக்களிக்கும் மனநிலையில் உள்ள அதே நேரத்தில், ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கும் 29% பேரில், 8 சதவிகிதம் பேர் "ரஜினிக்கு வாக்களிப்பீர்களா?' என கேட்டபோது ஒதுங்கிக்கொண்டது வித்தியாசமான கோணமாக இருந்தது. ரஜினியின் அரசியல் வருகை பற்றிய சந்தேகமே அவர்களின் இந்த மனநிலைக்குக் காரணமாக உள்ளது. அரசியல் குறித்து ரஜினி எடுக்கும் உறுதியான முடிவும், தனிக்கட்சியா-கூட்டணியா என்கிற அவரது நிலைப்பாடுமே அவருக்கான மக்கள் செல்வாக்கை உறுதி செய்யக்கூடியதாக உள்ளன.

முன்னணியில் திமுக

முன்னணியில் திமுக

நமது சர்வேயின் அடிப்படையில் தற்போதைய அரசியல் களத்தில் தி.மு.க. முன்னணியில் உள்ளது. அரசியலுக்கு இன்னும் வருகை தராத ரஜினிக்கு முக்கியத்துவம் நிறைந்துள்ளது. அவரது அரசியல் வருகையின் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாக பலரும் நம்புகிற நிலையில் ரஜினி+பா.ஜ.க.+ஓ.பி.எஸ். அணி கூட்டணி கண்டால் தற்போதைய சர்வே கணக்கின்படி சாதகமாகலாம். அதே நேரத்தில், ரஜினி தனிக்கட்சிதான் அமைக்க வேண்டும் என்ற கருத்தே பலமாக இருப்பதால், வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவு வாய்ப்புள்ளது.

மக்கள் ஆர்வம்

மக்கள் ஆர்வம்

சர்வேயில் தமிழக மக்கள் காட்டிய ஆர்வமும், யாரை ஆதரிக்கிறோம் என்பதை பெரும்பாலானவர்கள் தயக்கமின்றி வெளிப்படுத்தியதும், எப்போது தேர்தல் வரும் என்ற எதிர்பார்ப்புடன் தமிழக வாக்காளர்கள் இருப்பதையே வெளிப்படுத்தியது என்று நக்கீரன் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajini cannot make any big impact on DMK, says Nakkeeran survey
Please Wait while comments are loading...