அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவில் தங்கி மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்ட ரஜினிகாந்த் திங்கட்கிழமை சென்னை திரும்பினார்.

மும்பையில் நடைபெற்ற காலா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்றார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஜூன் 28ம் தேதி மும்பையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு தங்கியிருந்த ரஜினி சில மருத்தவ பரிசோதனைகள் செய்துகொண்டார்.

Rajini kanth Arrival At Chennai

இதனிடையே ரஜினிகாந்த் அமெரிக்காவில் சூதாட்ட கிளப் ஒன்றில் இருக்கும் படம் அண்மையில் வெளியாகி இருந்தது. இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் செல்பி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவில் காரை ஒருவர் ஓட்ட ரஜினிகாந்த் பேசிக் கொண்டே செல்வது போல் காட்சி இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் அமெரிக்காவில் தங்கி மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்ட ரஜினி நேற்று மாலை சென்னை திரும்பினார். இதையடுத்து காலா படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
super star Rajini kanth Arrival At Chennai
Please Wait while comments are loading...