டிசம்பர் 12ஆம் தேதி கட்சிப் பெயரை அறிவிக்கிறாரா ரஜினிகாந்த்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதியில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதன்மூலம் டிசம்பரில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது தயாராக இருங்கள் போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். தனது அரசியல் பிரவேசத்தை அவர் இவ்வாறு கூறுவதாக அனுமானிக்கப்பட்டது/

தான் ஒரு பச்சை தமிழன் என்றும் தமிழகத்தில் இருந்து தூக்கிப் போட்டல் இமயமலையில் தான் விழுவேன் வேறு எந்த மாநிலத்திற்கும் செல்ல மாட்டேன் என்றார். மேலும் அரசியல் பலமே எதிர்ப்புதான் என்று கூறி தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார்.

ரஜினிக்கு எதிர்ப்பு

ரஜினிக்கு எதிர்ப்பு

ரஜினி அரசியலுக்கு வருவதற்கு சீமான், வேல்முருகன், அன்புமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

நான் மறுக்கவில்லை

நான் மறுக்கவில்லை

அப்போது, அரசியலுக்கு நான் வருவேன் என என்னை சந்திப்பவர்கள் கூறுவதை மறுக்கவில்லை என்றார். மேலும் அரசியலுக்கு வருவது குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்றம் ரஜினிகாந்த் கூறினார்.

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறேன்

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறேன்

அரசியலுக்கு வருவது பற்றி முடிவெடுக்கும் போது தெரிவிப்பேன் என்றும் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செப்டம்பர் அல்லது அக்டோபர் இறுதியில் ரசிகர்களை சந்திக்கிறேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரசிகர்களிடம் ஆலோசிக்கவா?

ரசிகர்களிடம் ஆலோசிக்கவா?

கடந்த மாதம் தான் ரசிகர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் அடுத்த 6 மாதத்துக்குள் ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக கூறியிருப்பது அரசியல் பிரவேசம் குறித்தும் கட்சிக்குறித்தும் ஆலோசிக்கவே என கூறப்படுகிறது.

டிசம்பர் 12ல் அறிவிப்பு?

டிசம்பர் 12ல் அறிவிப்பு?

அடுத்த ஒன்றரை மாதத்தில் அதாவது டிசம்பர் 12ஆம் தேதியான ரஜினியின் பிறந்தநாளில் கட்சிக்குறித்து ரஜினி தனது அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் ரஜினியின் அறிவிப்பு வெளியாகிறதா என்று..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Super star Rajinikanth meets his fans again in the month of September and actober. He may announce on his bithday about his Political party.
Please Wait while comments are loading...