எப்ப தலைவா வருவீங்க.. ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்.. கூட்ட அரங்கிலேயே கோஷம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி!- வீடியோ

  சென்னை: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து தெளிவாக அறிவிக்காததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் கூட்ட அரங்கிலே அவர்கள் கோஷம் இட்டனர்.

  சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களிடம் ரஜினி உரையாற்றி வருகிறார். இந்த சந்திப்பில் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  Rajini politics speech disappoints his fans

  ஆனால் இதில் பேசிய ரஜினி ''அரசியலுக்கு நான் புதிதல்ல. அரசியலில் என்ன சிரமம் இருக்கிறது என்று தெரியும். அரசியல் குறித்து நான் டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன்'' என்று குறிப்பிட்டார்.

  இதையடுத்து ரஜினி அரசியல் குறித்து இன்று அறிவிப்பு வெளியிடுவார் என்று நினைத்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த முறையும் அறிவிப்பு வெளியாகவில்லையே என்று ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

  இதனால் சில ரசிகர்கள் மேடைக்கு அருகில் சென்று கோஷமிட்டனர். அவர்களை ரஜினி அருகில் அழைத்து சமாதானம் செய்தார்.

  மேலும் சிலர் ''தலைவா எப்ப தலைவா அரசியலுக்கு வருவ'' என்றும் கோஷமிட்டனர். இவர்களிடம் ரஜினி அருகில் சென்று சமாதானமாக பேசினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajini meets his fans in Ragvendra Hall. While speaking with his fans he says that he knows what is politics. He also added that politicians should win. He also he announce about politics in December-31. Rajini politics speech disappoints his fans, since he said the date of announcement on Dec-31.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X