"மீடியான்னா எப்போதும் எனக்கு பயம் தான்...." - ரஜினி ஓபன் டாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பல வருஷமாக அரசியலில் இருப்பதாக கூறிய ரஜினி, தனக்கு மீடியாக்கள் தான் பயம் என்றும் அவர்களின் கேள்விகளுக்கு சில நேரங்களில் பதில் சொல்ல முடியாமல் தவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திர மண்டபம் ரசிகர்களுடனான சந்திப்பில், தனிக்கட்சி தொடங்கப்போவதாக அவர் அறிவித்தார். இதனை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு, கைத்தட்டி தங்களின் ஆதரவை தெரிவித்தனர். முன்னதாக பேசிய ரஜினி தான் எப்போதும் அரசியலை கண்டு பயந்ததில்லை என்றார்.

Rajini said he was afraid of media not of politics

மேலும் பேசிய அவர், நான் பயப்படுவதே இந்த மீடியாக்களை பார்த்து தான். அரசியல் ஜாம்பவான்களே மீடியாக்கள்ன்னா பயப்படுகிறார்கள், நான் இதில் கத்துக்குட்டி. திடீரென மைக்கை நீட்டி அவர்கள் எதாவது கேள்வி கேட்க, நான் எதாவது பதில் சொல்ல அது மிகப்பெரிய விவாதப்பொருளாகி விடுகிறது. அதனால் தான் நான் மீடியாவை கண்டு பயப்படுகிறேன்.

என்னுடைய அரசியல் குரு சோ கூட, மீடியாக்களிடம் ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவுரை கூறியுள்ளார். அதனை ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் இப்போது இல்லை, அவர் இருந்திருந்தால் இப்போது எனக்கு பத்து யானை பலம் இருந்திருக்கும், ஆனால் அவர் இல்லாதது இழப்பு தான், என ரஜினி வருத்தம் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajini said he was afraid of media not of politics. The media hikes my words and makes it as a debate which will create problems, so only i am always afraid of media, he adds.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற