சச்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்- நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெற்றியடைய நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்படும் சச்சினின் வாழ்க்கை 'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற பெயரில் படமாக வெளிவரப்போகிறது. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியாகி 2 கோடி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

 Rajini wishes sachin for his upcoming biopic success

ஓபனிங் கமெண்ட்ரியோடு தொடங்கும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் தன் வாழ்க்கைக் கதையில் சச்சினே நடித்துள்ளார்.

சச்சினின் நண்பர் ஜேம்ஸ் எரஸ்கின் இயக்கி உள்ள இந்த படத்தில் சச்சினுடன் வீரேந்திர சேவாக், மாயுரேஷ் பென், அர்ஜுன் டெண்டுல்கர், சச்சினின் மனைவி அஞ்சலி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சச்சினின் வாழ்க்கை வரலாறு படமாக வெளிவந்து வெள்ளி விழா காண வேண்டும் என்று சச்சினுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சச்சின் எ மில்லியன் ட்ரீம்ஸ் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன், கடவுளின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும் என்றும் அந்த டுவிட்டர் வாழ்த்தில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Super star Rajinikanth twitted sachin as my best wishes for the success of 'Sachin ... a billion dreams'.
Please Wait while comments are loading...