ரஜினி ரசிகர்களுக்கு டிசம்பரிலேயே "புத்தாண்டு"?.. முக்கிய அறிவிப்புக்காக வெயிட்டிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 67-ஆவது பிறந்த தினத்தில் அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழலை கவனமாக கவனித்து வந்தார் ரஜினிகாந்த். இதையடுத்து நீண்ட காலத்துக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க அழைப்பு விடுத்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசினார்.

போருக்கு தயாராகுங்கள்

போருக்கு தயாராகுங்கள்

ரசிகர்களாகிய உங்களுக்கும் தொழில் இருக்கிறது. எனக்கும் தொழில் இருக்கிறது. எனவே உங்கள் வேலையை நீங்கள் பாருங்க, என் வேலையை நான் பார்க்கிறேன். போர் வரட்டும் சந்திக்கலாம் என்றும் கூறியிருந்தார். இது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.

உறுதி செய்த தமிழருவி மணியன்

உறுதி செய்த தமிழருவி மணியன்

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனும் ரஜினியின் நண்பரான ராஜ் பகதூரும் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து ரஜினி ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்பது குறித்த சாதகங்களை ஒரு மாநாட்டில் தமிழருவி மணியன் முன்வைத்தார்.

தீவிரம்

தீவிரம்

கட்சி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக ரஜினியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் சிவாஜி மணி மண்டப விழாவில் பேசிய ரஜினி, அரசியலில் வெற்றியடைய பணம், பேர் ,சினிமா புகழ் ஆகியவற்றை காட்டிலும் வேறு ஒன்று தேவை. அது மக்களுக்கு மட்டுமே தெரியும் என்றார்.

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

ரஜினியின் 67-ஆவது பிறந்தநாள் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ரஜினி போயஸ் கார்டனில் ரசிகர்கள் மத்தியில் பேசுவார் என்றும் அப்போது அவர் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்புகளை அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டிசம்பரில் புத்தாண்டு

டிசம்பரில் புத்தாண்டு

எந்தக் கட்சியிலும் சேரப்போவதில்லை என்றும் தனிக்கட்சி தொடங்குவது என்பதிலும் அவர் உறுதியாக உள்ளார். இதன் மூலம் அவர் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெறுவார் எனவும் தெரிகிறது. பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி மாதத்தில்தான் வரும், ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு வரும் டிசம்பரிலேயே புத்தாண்டு கொண்டாட்டம் காத்திருக்கிறது என்பது இனிப்பான செய்தியாகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Superstar Rajinikanth is also likely to make a similar ‘big announcement’ on his birthday next month.
Please Wait while comments are loading...