முதல்வராக ஆசைப்பட்டால் முதலுக்கே மோசம்.. ரஜினிகாந்த்துக்கு கர்நாடக ஜோதிடர் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினி கிங் மேக்கராக இருக்க வேண்டுமே தவிர, கிங் நாற்காலிக்கு ஆசைப்படக்கூடாது..- கர்நாடக ஜோதிடர்

  பெங்களூர்: உடுப்பியை சேர்ந்தவர் பிரகாஷ் அம்முன்னாய என்ற ஜோதிடர். சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகளை துல்லியமாக அவர் கணித்திருந்தார்.

  குஜராத்தில் காலை 10 மணிவரை காங்கிரஸ் முன்னிலை பெறுவதை போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் 10 மணிக்கு மேல் அது மாறி பாஜக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்பதே கிரக நிலை என்று கணித்திருந்தார்.

  தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஒருநாளைக்கு முன்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த தகவலை வெளியிட்டார். ஜோதிடர் கூறியதை போலவே, குஜராத் தேர்தல் முடிவுகளும் அமைந்தன. இதையடுத்து கர்நாடக மீடியாக்கள் அவர் வீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றன.

  ரஜினிகாந்த் அரசியல் நிலை

  ரஜினிகாந்த் அரசியல் நிலை

  இந்த நிலையில், அவர் ரஜினிகாந்த் அரசியல் நிலை என்னவாகும் என்பது பற்றி 'ஒன்இந்தியா'வுக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது உங்கள் பார்வைக்கு: ரஜினிகாந்த் மகர ராசிக்காரர். சிம்ம லக்கினம். ரஜினிகாந்த்துக்கு 'துர்தரா' யோகம் உள்ளது. இந்த யோகம் உள்ளவர்களை எதிர்த்து நின்று யாராலும் ஜெயிக்க முடியாது. பின்னால் இருந்துதான் வெற்றி கொள்ள முடியும்.

  வாலி யோகம்

  வாலி யோகம்

  ராமாயணத்தில், வாலிக்கும் இதுபோன்ற யோகம் இருந்தது. எனவேதான், எதிர்த்தவர்கள் பலம் எல்லாம் வாலிக்கு சென்றுவிடும். இதனால்தான் ராமர் மறைந்திருந்து, வாலியை அம்பெய்தி கொன்றார். எனவே ரஜினிகாந்த், தன்னுடனே உள்ளவர்களிடம்தான் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிகவும் எச்சரிக்கையோடுதான் தன்னை சுற்றிலும் அவர் ஆட்களை அனுமதித்து வருகிறார் என்பது நல்ல விஷயம்தான்.

  லோக்சபா தேர்தலில் ரஜினிகாந்த்

  லோக்சபா தேர்தலில் ரஜினிகாந்த்

  ரஜினிகாந்த் ராசி நிலவரப்படி அவர் கட்சி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் 3 முதல் 5 தொகுதிகளை வெல்ல முடியும். ரஜினி ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளது. எவ்வளவு உயரத்திற்கு போனாலும், இந்த தோஷம் இருந்தால் அவர்களை கீழே கொண்டு சென்றுவிடும். இதற்கு ஒரு உபாயம் உள்ளது. ரஜினிகாந்த், தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த கூடாது. கட்சி தலைவராக இருக்கலாம்.

  வெற்றி உறுதி

  வெற்றி உறுதி

  கிங் மேக்கராக இருக்க வேண்டுமே தவிர, கிங் நாற்காலிக்கு ஆசைப்படக்கூடாது. கட்சி தலைவராக இருந்து கொண்டு கை காட்டுபவரை முதல்வராக்க வேண்டும். அப்படி செய்தால், ரஜினிகாந்த் கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். ரஜினிகாந்த் ஜாதகப்படி அவர் மிகுந்த போராட்டங்களை எதிர்கொண்டே உயரத்தை அடைவார். அரசியலிலும் அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்புகள் வரும். கிங் மேக்கராக அவர் செயல்பட்டால் அத்தனை எதிர்ப்புகளையும் அவர் தூள் தூளாக்கி முன்னேறி வெற்றிக்கொடி நாட்டுவார். இவ்வாறு பிரகாஷ் அம்முன்னாய தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamil superstar Rajinikanth political career has been analysis according to Vedic astrology by well known astrologer Prakash Ammanaya.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற