மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் பாராட்டு.. எதற்காக தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முரசொலி பவளவிழாவை சிறப்பாக நடத்தியதாக மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முரசொலி பவளவிழா அழைப்பிதழில் பெயர் இடம்பெற வேண்டாம் என கேட்டுக்கொண்டார் ரஜினிகாந்த். இருப்பினும் விழாவில் அவர் பங்கேற்றார். ஆனால் அழைப்பிதழில் குறிப்பிடாததால் விழா மேடையின் கீழே அமர்ந்துகொண்டார் ரஜினி.

Rajinikanth praises MK Stalin for completing Murasoli function

இருப்பினும் அவரையும் மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி மரியாதை அளித்தார் மு.க. ஸ்டாலின். இதனிடையே விழா நிறைவடைந்த பிறகு சென்னை போயஸ் இல்லம் திரும்பிய ரஜினி, நிருபர்களிடம் கூறுகையில், முரசொலி பவளவிழாவை சிறப்பாக நடத்தியதாக ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார்.

முரசொலி பவள விழா நிகழ்ச்சி அருமையாக இருந்தது என்றும் ரஜினி தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Rajinikanth praises MK Stalin for compleating Murasoli function with great manner.
Please Wait while comments are loading...