தமிழ் உயிர் மெய் எழுத்துக்களை வேகமாக சொல்லுங்க பார்ப்போம்.. ரஜினிக்கு சீமான் சவால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம் தமிழில் உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை உள்ளது என ரஜினிகாந்துக்கு தெரியுமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ரஜினி தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்துக்களை முதலில் வேகமாக சொல்லட்டும் பிறகு அவர் அரசியலுக்கு வரலாம் என்றும் சீமான் சாடியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என ஆரம்பத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்றும் அவர் கூறிவருகிறார்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

மணல் விலை ஏறிவிட்டது

மணல் விலை ஏறிவிட்டது

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மணல் விலை ஏறி விட்டது என்றார். பிற மாநிலங்களில் ரூ.40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

ரஜினிக்கு எதுவும் தெரியாது

ரஜினிக்கு எதுவும் தெரியாது

வெளிநாடுகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. ஆனால் இதனை பற்றி நடிகர் ரஜினிகாந்துக்கு எதுவும் தெரியாது என்றார்.

உயிர்மெய் எழுத்துக்களை சொல்லட்டும்

உயிர்மெய் எழுத்துக்களை சொல்லட்டும்

தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் ஓடுகின்றன என ரஜினிக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் தமிழில் உயிர் மெய் எழுத்து எத்தனை உள்ளது என்பதை ரஜினிகாந்த் வேகமாக சொல்லட்டும். அப்புறம் அரசியலுக்கு வரட்டும் என்றும் சீமான் ரஜினியை சாடினார்.

ஜிஎஸ்டிக்கு கண்டனம்

ஜிஎஸ்டிக்கு கண்டனம்

பொட்டலமாக விற்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி.வரியை மத்திய அரசு விதித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்றும் சீமான் கூறினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Seeman said that Rajinikanth should tell tamill letters first. then he can come to politics. He Dont know how many rivers are in Chennai
Please Wait while comments are loading...