For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. ஒரு நடிகை அவருக்கு சட்டம் தெரியாது- சு.சாமி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவருக்கு சட்டங்கள் தெரியாது என்று சுப்ரமணியசுவாமி கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சுப்ரமணியசாமி கண்டனம்

சுப்ரமணியசாமி கண்டனம்

இது தொடர்பாக வதோதராவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, "ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவருக்கு சட்டங்கள் தெரியாது. சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி கவலைப்படாமல், அவர் இப்படி முடிவெடுத்திருக்கிறார்.

ஜெ. மீது நடவடிக்கை

ஜெ. மீது நடவடிக்கை

ஜெயலலிதா இத்தகைய முடிவை எடுப்பதைத் தடுப்பதற்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவை எனில், அவர் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளலாம்" என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

ஷானவாஸ் ஹூசைன்

ஷானவாஸ் ஹூசைன்

பாஜகவின் மற்றொரு தலைவரான ஷானவாஸ் ஹுசைன் கூறும்போது, "தமிழக அரசு இந்த விவகாரத்தில் பல்வேறு தவறுகளைச் செய்துவிட்டது. இது மிகவும் முக்கியமான விவகாரம் என்பதுடன், இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மக்களுக்கு நீதித் துறை மீது நம்பிக்கை உள்ளது. அனைவருக்குமே சமமான நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.

இது அரசியல் அல்ல

இது அரசியல் அல்ல

மேலும் "தமிழக அரசின் முடிவில் நான் எந்தத் தவறையும் பார்க்கவில்லை. இது கட்சியின் முடிவு அல்ல; தமிழக அரசின் முடிவு. இது அரசியலும் அல்ல. இதை அரசியல் விவகாரமாக நான் பார்க்கவில்லை. என்றும் ஷானவாஸ் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா

இதனிடையே மரண தண்டனையை ஆயுளாக குறைத்த உச்ச நீதிமன்றம், மாநில அரசு விரும்பினால், அவர்களை விடுதலை செய்யலாம் என்று சொல்லியிருக்கிறது. இது, சட்ட அமைப்பு விவகாரம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறியுள்ளார்.

English summary
fter Rajiv Gandhi killers' case took an unprecedented turn with Chief Minister J Jayalalithaa ordering the release seven convicts, apart from the praise, a few voices of opposition were raised too. While Subramanian Swamy (Bharatiya Janata Party) said the Cabinet decision was illegal,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X