கருணாநிதி நூறாண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும்... வாழ்த்திய ராமதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் | Oneindia Tamil

  சென்னை: திமுக தலைவர் மு.கருணாநிதி நூறாண்டுக்கு மேல் வாழ வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்தியுள்ளார். தம்மை கருணாநிதி புன்சிரிப்புடன் வரவேற்றார் எனவும் அவரை சந்தித்தபின் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  ஓராண்டாக முதுமை மற்றும் உடல்நிலை குறைவால் தீவிர அரசியலில் இருந்து கருணாநிதி ஒதுங்கி இருந்தார். கடந்த சில வாரங்களாக அவரது முரசொலி அலுவலகம், பேரன் திருமணம் என்று உற்சாகமாக வெளியில் வந்து தொண்டர்களுக்கு புது தெம்பை கொடுத்து வருகிறார் கருணாநிதி.

  இந்த நிலையில் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்றார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.

  கருணாநிதியுடன் சந்திப்பு

  கருணாநிதியுடன் சந்திப்பு

  ராமதாசுடன் பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது ராசாத்தி அம்மாளும் உடனிருந்தார்.

  ட்விட்டரில் பதியேற்றிய ராமதாஸ்

  இந்த சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். திமுக தலைவரும் எனது நண்பருமான கலைஞரை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த போது என்று கூறி அந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

  ராமதாஸ் பெயரை உச்சரித்த கருணாநிதி

  கருணாநிதியிடம் போய் பேர் சொல்லுங்கப்பா என்று கேட்கிறார் ஸ்டாலின், அதற்கு கருணாநிதி வாயை அசைத்து ராமதாஸ் என்று கூறுகிறார். அதைப் பார்த்து அனைவரும் உற்சாகமாக சிரித்தனர்.

  கருணாநிதி புன்னகை

  கருணாநிதி புன்னகை

  வந்திருந்த அனைவரையும் பார்த்து சிரித்தார் கருணாநிதி. கருணாநிதி உடனான சந்திப்பு ராமதாசுக்கு உற்சாகமாகவே இருந்தது சந்திப்புக்குப் பின்னர் பேசிய ராமதாஸ், தம்மை கருணாநிதி புன்சிரிப்புடன் வரவேற்றார் என்றும் நூறாண்டுக்கு மேல் கருணாநிதி வாழ வேண்டும் என வாழ்த்தினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Pattali Makkal Katchi founder Dr Ramadoss met DMK President Karunanidhi at Gopalapuram, Chennai. Ramadoss posted meeting video.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற