‘உங்களோடு வர மாட்டேன்’.. கைது செய்யப்பட்ட கர்ணன் போலீசாருடன் வாக்குவாதம்.. கோவையில் பரபரப்பு
கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் போலீசாருடன் செல்ல மாட்டேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
கோவை: உச்சநீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்த நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீசார் இன்று கோவையில் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான உடன் கர்ணன் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில், கோவையில் இருந்த கர்ணனை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். அப்போது, "நான் உங்களோடு வர மாட்டேன்" என ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications