For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய கம்யூனிஸ்ட் கூட்டம்: தா.பாண்டியனுக்கு எதிராக நிர்வாகிகள் ஆவேசம்

By Mayura Akilan
|

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தா.பாண்டியனுக்கு எதிராக நிர்வாகிகள் போர்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

லோக்சபா தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தலா 9 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றன.

Revolt against Tha Pandian among CPI leaders

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வட சென்னை, கோவை, மதுரை கன்னியாகுமரி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 9 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலையும் அந்த கட்சி அறிவித்துவிட்டது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தென்காசி, நாகப்பட்டினம், திருப்பூர், சிவகங்கை, தர்மபுரி, கடலூர், திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதற்கான வேட்பாளர்களை முடிவு செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்டின் மாநில நிர்வாக குழு கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் அந்த கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

மாநில செயலாளர் தா.பாண்டியன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். தேசிய செயற்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரன், சிவபுண்ணியம் மற்றும் ஸ்டான்லி குணசேகரன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தா.பாண்டியனுக்கு எதிராக நிர்வாகிகள் ஆவேசம் அடைந்து கூச்சலிட்டனர். கட்சியின் பின்னடைவுக்கு அவர் தான் காரணம் என்று குற்றம் சாட்டி வாக்குவாதம் செய்தனர். இன்று மாலை இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

English summary
CPI leaders have revolted against Tha Pandian regarding LS seats
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X