ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்... நோ பொதுச்செயலாளர்.. அவ்வளவுதாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 Rights for General Secretary in ADMK will be given to new organisers OPS and EPS

அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதிமுக கட்சியின் விதி 19ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

  அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்-வீடியோ

  இதே போன்று அதிமுக உறுப்பினர் சேர்க்கை, மற்றும் நீக்கம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கே வழங்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கம் எம்பியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  ADMK general secretary posting demolished and the powers of this postition will be handed over to Party Organiser O. Paneerselvam and co organiser Edappadi Palanisamy

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற