சென்னையில் பிரபல ரவுடி தனசேகர் வெட்டிக் கொலை.. காவல் நிலையத்திற்கு அருகிலேயே கொடூரம்

சென்னை: சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி தனசேகர், இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
ரவுடி தனசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீசால் கைது செய்யப்பட்டார் . அதன் பின் ஜாமினில் வெளியே வந்த தனசேகர், போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்திருக்கிறார்.

சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஆள்கடத்தல், திருட்டு, கொலை முயற்சி என்று பல வழக்குகள் இவர் மீது இருக்கிறது. மொத்தமாக 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போது விசாரணையில் உள்ளது.
அவ்வப்போது ஜாமீனில் வெளியே வரும் இவர், பின் தலைமறைவாகி போலீசுக்கு பிரச்சனை கொடுத்து வந்திருக்கிறார். அதேபோல் இவருக்கு பல முன்பகையும் இருந்திருக்கிறது. இந்த நிலையில்தான் இன்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
சென்னை திருவான்மியூர் அவ்வை நகரில் தனசேகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். காவல் நிலையத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த போது இந்த கொடூரம் நடந்து இருக்கிறது. மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து அவரை கொலை செய்து இருக்கிறார்கள்.
இந்த கொடூர செயலை செய்தது யார் என்று தெரியவில்லை. முன்பகை காரணமாக இந்த கொலை நடந்து இருக்கா வாய்ப்புள்ளது. போலீஸ் அந்த மர்ம நபர்களை தேடி வருகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!