2 ஆப்பிள் ஜூஸு.. கையில இல்லை காசு.. இந்தா பிடி கத்தி.. ஒரு கலகல ரவுடி கதை!
ஜூஸ் குடித்துவிட்டு கத்தியை அடமானமாக ரவுடி ஒருவர் விட்டு சென்றுள்ளார்.
Recommended Video

சென்னை: வர வர ரவுடிகள் எல்லாம் ரொம்ப காமெடி பண்றாங்க... 'முடியலை' என்று மக்கள் அலுத்துக் கொள்ளும் அளவுக்கு ரவுடித்தனம் தடம் மாறி வருகிறது.
சமீபத்தில் ஒரு ரவுடி பாக்ஸிங் ஸ்டைலில் கடைக்காரரை கும்மாங்குத்து விட்டு பின்னர் போலீஸில் சரணடைந்தார். இது இன்னொரு ரவுடியின் காமெடிக் கதை.
திருவான்மியூர் சீவார்டு சாலையில் ஒரு ஜூஸ் கடை உள்ளது. இந்த கடைக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு ரவுடி வந்தார். கடைக்குள் நுழையும்போதே "ஃபுல்" ஆக தள்ளாடிதான் வந்தார்.

ஜூஸுக்கு பணம்?
கடைக்குள் வந்ததும் ஆப்பிள் ஜூஸ் வேணும் என கேட்டு வாங்கி குடித்தார். குடித்து முடித்ததும் ரவுடியிடம் கடைக்காரர் காசு கேட்டார். ஆனால் ரவுடி என்கிட்ட காசு இல்லை, தர முடியாது என்று சொன்னார். ஆனால் கடைக்காரர் விடாமல் குடித்த ஜூஸூக்கு பணம் வேண்டும் என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி, தன்னிடமிருந்த கத்தியை எடுத்து கொண்டு கடைக்காரரை மிரட்டினார்.

பரவாயில்ல.. அப்பறமா தாங்க
இப்போது கடைக்காரர் உஷாராகிவிட்டார். 'பார்ட்டியோ போதையில் உள்ளது, பணத்தையும் வாங்க முடியாது, கையிலும் கத்தி உள்ளது'... இவ்வளவையும் கவனித்த கடைக்காரர் சுதாரித்து கொண்டு, "பணம் எல்லாம் வேணாம். இருக்கும்போது அப்பறமா வந்து கொடுத்தால் போதும்" என்றார்.

அடமானமா வெச்சிக்கோ
கடைக்காரர் இப்படி சொன்னதும் ரவுடிக்கு ஒருமாதிரியாகி விட்டது. ஏற்கனவே போதையில் இருந்த ரவுடிக்கு இப்போது கடைக்காரர் மீது திடீர் கரிசனமும், பாசமும் வந்துவிட்டது. அடடா கடைக்காரர் ரொம்ப "நல்லவரா" இருக்காரே என்று நினைத்த "ரவுடி சார்".. "சரி... என் வீடு பக்கத்துலதான் இருக்கு. நான் பணம் தராமல் எங்கேயும் ஜூஸ் கிடைச்சது கிடையாது. நான் குடிச்ச ஒரு ஆப்பிள் ஜூஸுக்கான பணத்தை அப்பறமா தரேன். அதுவரைக்கும் என் கத்தியை அடமானமா வெச்சிக்கோ. பணத்தை கொடுத்துட்டு என் கத்தியை நான் மீட்டுக்கறேன்" என்றார்.

இன்னொரு ஜூஸ் கொண்டா
"பட் இந்த டீலிங் நல்லாருக்கே" என்று நினைத்த கடைக்காரரும் ஒப்புக் கொண்டு கத்தியை வாங்கிக் கொண்டார். கடைக்காரர் கத்தியை வாங்கியதும், ரவுடிக்கு மீண்டும் தெனாவட்டு கூடிவிட்டது. இப்போது சத்தமாக "டேய்... இன்னொரு ஆப்பிள் ஜூஸ் கொண்டா" என்று மிரட்டும் தொணியில் கேட்டார். உடனே ஜூஸூம் வந்தது. அதை வாங்கி குடித்துவிட்டு ரவுடி சென்றுவிட்டார்.

தேடப்படும் ஜூஸ் ரவுடி
இப்போது 2 ஜூஸூக்கான பணம் அவர் கடைக்காரரிடம் தர வேண்டியுள்ளது. ரவுடி சென்றபின்னர், கடைக்காரர் அந்த கத்தியை கொண்டுபோய் திருவான்மியூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு, ரவுடி மீது ஒரு புகாரும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். ரவுடி கடைக்குள் நுழைந்து 2 ஜூஸ் குடிக்கிறவரைக்கும் எல்லா காட்சிகளும், அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாயின. அந்த காட்சிகள் தற்போது வெளியாகியும் உள்ளது. இந்த காட்சிகளை வைத்து "ஜூஸ் ரவுடி"யை போலீசார் தேடி வருகின்றனர்.
ம்ம்.. எப்பேர்ப்பட்ட "கபாலி"களை பார்த்த சென்னை பூமி இது.. இப்படி கபால்னு கவிழ்ந்து போன ரவுடிகளையும் பார்க்க வேண்டியிருக்கே!
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications