சேலத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சை மரகதலிங்கம் மீட்பு.. பெண் உள்பட 5 பேர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை மரகதலிங்கத்தை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் அருகே தாரமங்கலம் வழியாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் கடத்தப்படுவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில் தாரமங்கலம் அருகே மாறு வேடத்தில் போலீசார் முகாமிட்டு இருந்தனர்.

Rs.25 crores worth maragatha linga recovered

அப்போது அங்குள்ள பால்பண்ணை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர். அதில் ஏழு கிலோ எடை கொண்ட பச்சை மரகதலிங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும் என ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை தாரமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rs.25 crores worth maragatha linga recovered in salem
Please Wait while comments are loading...