அண்ணாநகர் சரவணபவனில் அனாதையாக கிடந்த ரூ.25 லட்சம்.. போலீசில் ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு
ஓட்டலில் கிடந்த ரூ.25 லட்சம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
Recommended Video

சென்னை: அண்ணாநகர் சரவணபவனில் கேட்பாரற்று கிடந்த 25 லட்சம் ரூபாய் பணப்பையினை ஓட்டல் ஊழியர் ரவி, பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அண்ணாநகர் ரவுண்டானாவில் சரவண பவன் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவும் ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக அதிகம் பேர் வந்திருந்தனர். அப்போது இரவு 10,30 மணியளவில் ஓட்டலின் ஊழியர் ரவி என்பவர் ஒரு மேஜை மீது ஒரு பை ஒன்று கிடப்பதை கண்டார்.

அந்த பையை திறந்துபார்த்தபோது கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, அந்த பணப்பையினை ஓட்டலின் மேனேஜரிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து ஊழியர் ரவி மற்றும் மேனேஜர் ரவி இருவரும் அந்த பணப்பையினை அண்ணாநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கட்டுக்கட்டாக பணத்தினை கண்டும் அதனை மேனேஜரிடம் பத்திரமாக ஒப்படைத்த ஊழியர் ரவியின் நேர்மையை இன்ஸ்பெக்டர் வெகுவாக பாராட்டினார். பின்னர் ரவிக்கு ஒரு கைக்கடிகாரத்தினையும் வெகுமதியாக அளித்தார். இதனால் ஊழியர் ரவியின் நேர்மைக்குக்கு காவல்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், குவிந்து வருகின்றன.
ஒப்படைக்கப்பட்ட பணம் குறித்து இதுவரை யாரும் வரவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பணம் தேடி வருபவர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications