காவல் துறை வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.450 கோடி.. பட்ஜெட்டில் ஒதுக்கீடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காவல் துறைக்கான வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதற்கு பின்னர் 2017- 2018 -ஆம் நிதி ஆண்டுக்கான முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது.

Rs. 450 Crores for Police Housing Board

அவை தொடங்கியதும் திருக்குறளை வாசித்து நிதி அமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது காவல் துறை வீட்டு வசதி திட்டத்துக்கு என ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார்.

இந்த நிதி ஆண்டில் காவல் துறைக்கென ரூ.1,483 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையை நவீனமயமாக்குவதற்காக ரூ.47.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு காவல் இளைஞர் படையில் 10,500 பேர் சேர்க்கப்படுவர் என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rs. 450 Crores has allocated for Police Housing Board project.
Please Wait while comments are loading...