ஊருக்கு போக வண்டி இல்லையா மச்சான்!... கோயம்பேடுல ஒரு பஸ்ஸை ஓட்டினு போய்டு!!...எஸ்வி சேகர் நக்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் பேருந்து இல்லாமல் அவதிப்படும் மக்களை கிண்டல் செய்யும் விதமாக லைசன்ஸ் வைத்துக் கொண்டு பஸ் ஓட்டினால் சொந்த ஊருக்கும் சென்றுவிடலாம் என்று எஸ்வி சேகர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

S.Ve.Shekher criticises transport workers strike in a jovial manner

இதனால் மக்கள் பாதிப்பை தடுப்பதற்காக தற்காலிக ஓட்டுநர், பேருந்தை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் டிரைவர் வேலைக்கு கூவி கூவி அழைப்பும் விடுக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குகின்றன.

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வது எப்படி என்று புரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் எஸ்வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் காமெடி என்று சொல்லிக் கொண்டு ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் படித்தது 😂 மச்சான் கோயம்பேடுல இருக்கேன்.. ஊருக்கு போக வண்டி இல்லடா என்ன பண்றது....

கைல லைசென்ஸ் வெச்சுருந்தா... எனக்கு வண்டி ஓட்ட தெரியும் ன்னு சொல்லு... உன்கிட்ட ஒரு பேருந்த கொடுப்பானுங்க கொண்டு போய் திருநெல்வேலில நிறுத்திட்டு வீட்டுக்கு போ... என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
S.Ve.Shekher says about transport workers strike and people in a jovial manner.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற