நடிகர் சங்க டிரஸ்ட்டி பதவியை ராஜினாமா செய்தார் எஸ்.வி.சேகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்க டிரஸ்டி பதவியை எஸ்.வி.சேகர் செய்தார். மேலும் சங்கம் தொடர்பாக தாம் கேட்ட கேள்விக்கு நிர்வாகம் பதில் தரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணிக்கு சார்பில் போட்டியிட்டதன் மூலம் டிரஸ்டி பதவியை பெற்றவர் எஸ்.வி.சேகர்.

S.Ve.Shekher resigned from Trustee post

இரு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் தற்போது நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் மீண்டும் வர இருக்கிறது. இந்நிலையில் எஸ்.வி.சேகர் தனது டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நடிகர் சங்கத்தில் கையெழுத்து போடுவதற்குதான் டிரஸ்டி பதவி என்ற நிலை உள்ளதாக தனது ராஜினாமாவுக்கு காரணம் கூறியுள்ள எஸ்.வி.சேகர் சங்கம் தொடர்பாக தாம் கேட்ட கேள்விக்கு நிர்வாகம் பதில் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் எதிர் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் மனசாட்சிக்கு விரோதமாக நடிகர் சங்கத்தின் பக்கம் ஏற்படும் தவறுக்கு தன்னால் உடன்பட முடியாது என்றும் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் பல்வேறு குளறுபடிகள் நடந்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
S.Ve.Shekher resigned from Trustee post of Nadigar Sangam.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற