மடாதிபதிகளின் உண்ணாவிரதத்தால் பற்றி எரிந்த மதுரை: எஸ்.வி. சேகர் பரபரப்பு பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மடாதிபதிகளின் உண்ணாவிரதத்தால்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டது என்றும் சாபத்திற்கு பரிகாரமில்லை என்றும் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைரமுத்து, ஆண்டாள் நாச்சியார் குறித்து பாராட்டத்தக்க கருத்துகளை பேசி வந்தார். அப்போது வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் அவரது நூலில் ஆண்டாள் குறித்து கூறியுள்ளதை வைரமுத்து மேற்கோள்காட்டினார்.

அந்த வார்த்தை ஆரம்ப காலத்தில் நல் அர்த்தத்தை கொடுப்பதாக இருந்த போதிலும் தற்போது அது தவறான அர்த்தத்ததை குறிக்கிறது. இதனால் வைரமுத்து ஆண்டாளை அவதூறாக பேசியதாக அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததன.

இந்து அமைப்புகள் போராட்டம்

இந்து அமைப்புகள் போராட்டம்

அவர் விளக்கம் கூறியும், வருத்தம் தெரிவித்தும் இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். ஏற்கெனவே வைரமுத்துவுக்கு கெடு விதித்து விட்டு உண்ணாவிரதத்தை கைவிட்ட நிலையில், ஜீயர் மறுபடியும் போராட்டத்தை தொடங்கி பிப்ரவரி 3-க்குள் வைரமுத்து ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

ஆலோசித்து முடிவு

ஆலோசித்து முடிவு

ஆனால் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை வைரமுத்து கோயிலுக்கு வரவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை. இதனால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பக்தர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக ஜீயர் அறிவித்தார்.

பக்தர்களுக்கு அழைப்பு

பக்தர்களுக்கு அழைப்பு

இந்நிலையில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார். மேலும் வைரமுத்து வந்து மன்னிப்பு கேட்கும் வரை பக்தர்கள் ஓயமாட்டார்கள் என்றும் ஜீயர் தெரிவித்தார்.

பொறுப்பற்ற பேச்சு

பொறுப்பற்ற பேச்சு

இதுகுறித்து எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் கூறுகையில், மடாதிபதிகள் மன வருத்தத்தில் உண்ணாவிரதம் இருப்பதால் மதுரை கோயில் தீவிபத்து போன்ற துர் சகுனங்கள். பாவத்திற்கு பரிகாரம் உண்டு. சாபத்திற்கு பரிகாரமில்லை. ஆண்டாளின் சக்தியை வைர முத்து உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. பக்தர்களின் வேண்டுகோளுக்காக ஜீயர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

சங்கராச்சாரியார் கைது

சங்கராச்சாரியார் கைது

அண்மையில் எஸ்வி சேகர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், 2004-ஆம் ஆண்டு சங்கராச்சாரியாரை கைது செய்ததால்தான் ராணி மாதிரி இருந்த ஜெயலலிதா மரணம், இன்றுவரை சர்ச்சையாகியுள்ளது. பிராமண சமுதாயத்தில் பிறந்தவர்களை எரியூட்ட வேண்டும். ஆனால் ஒரு டப்பாவில் போட்டு உள்ள போட்டுள்ளார்கள். இதைத்தான் சொன்னேன், பாவத்திற்கு பரிகாரம் உண்டு, சாபத்திற்கு பரிகாரம் கிடையாது என்றார் எஸ்.வி.சேகர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor S.Ve.Shekher says that Madurai temple fire accident occurs because only of Jeeyar's hunger strike. He has to get back the hunger strike, S.Ve.Shekher adds.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற