For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை திமுக அமைப்பை கலைத்தது கரு கலைப்புக்கு சமம்: அழகிரி ஆதங்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அழகிரி என்றாலே அதிரடி என்று சொல்லும் அளவிற்கு திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு தோற்றம் இருக்கும். அதுவே எதிர்கட்சியாக மாறிவிட்டால் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாகிவிடுவார்.

மத்திய அமைச்சராக பதவி வகித்த போதும் சரி, இப்போது எம்.பியாக உள்ள போதும் சரி எதற்கு வம்பு என்று ஒதுங்கிவிட்டதாகவே கூறுகின்றனர்.

பிறந்த நாள் வாழ்த்து பேனர்களால் எழுந்த சிக்கல் மதுரை நகரில் திமுக நிர்வாக அமைப்பே கூண்டோடு கலைக்கப்பட்டு விட்டது. தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருக்கும் தன்னிடம் கட்சித்தலைமை எதையும் கலந்து ஆலோசிப்பதில்லை என்ற ஆதங்கமும், வருத்தமும் எப்போதும் அழகிரியிடம் உண்டு. அது சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் வெளிப்பட்டது. மதுரையில் திமுக அமைப்பை கலைத்தது பற்றி கேட்டதற்கு ஆதங்கத்தோறும் வருத்தத்தோடும் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் அழகிரி.

என்னை கேட்கவில்லை

என்னை கேட்கவில்லை

மதுரை நகர் திமுக அமைப்பு கலைக்கப்பட்டதற்கு என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? கட்சித் தலைவரிடம் கேட்கவேண்டும். தென்மண்டல அமைப்புச் செயலாளரான என்னை கலந்து ஆலோசிக்க வில்லை.

கரு கலைப்புக்குச் சமம்

கரு கலைப்புக்குச் சமம்

எதற்காக அமைப்பை கலைத்தனர் என்று தெரியாது. இது கர்ப்பிணிப் பெண்ணின் கருவை கலைத்தது மாதிரியான நடவடிக்கை.

முதுகில் குத்திவிட்டார்கள்

முதுகில் குத்திவிட்டார்கள்

மதுரையில் என்னால் வளர்த்து விடப்பட்டவர்கள் சிலர் என்னுடைய முதுகில் குத்திவிட்டார்கள். ஆனால் எனக்கென்று உள்ள ஆதரவாளர்கள் இன்னமும் என்பக்கம்தான் இருக்கின்றனர்.

தலைவர் ஒருவர்தான்

தலைவர் ஒருவர்தான்

என்னைப் பொருத்தவரை திமுகவில் ஒரே தலைவர்தான் அவர் கலைஞர் மட்டும்தான். தலைவரே சொன்னால் கூட வேறு யாரையும் என்னால் தலைவர் என்று அழைக்க முடியாது.

மக்கள் ஏமாற்றிவிட்டார்கள்

மக்கள் ஏமாற்றிவிட்டார்கள்

திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்தோம். அதை புரிந்து கொள்ளாமல் 2011 தேர்தலில் மக்கள் மாற்றி ஓட்டுப் போட்டு விட்டார்கள். மக்கள் ஏமாற்றிவிட்டார்கள்.

மோடியின் நிர்வாகம்

மோடியின் நிர்வாகம்

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறார். அவர் ஒரு சிறந்த நிர்வாகி.

ஜெயலலிதா பிரதமரானால்?

ஜெயலலிதா பிரதமரானால்?

எல்லோருக்கும் பிரதமர் ஆகவேண்டும் என்று ஆசையிருக்கிறது. அதேபோலத்தான் ஜெயலலிதாவும் பிரதமராகவேண்டும் என்று ஆசைப்படுகிறார். வாழ்த்துகிறேன்.

நான் முதல்வரா?

நான் முதல்வரா?

தமிழ்நாட்டின் முதல்வராக நானா? எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்கிறேன். அதையும் மீறி தமிழக முதல்வராக மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தால் அவர்களுக்காக உயிரைக்கொடுத்து வேலை செய்வேன்.

அழகிரியின் ஆதங்கம்

அழகிரியின் ஆதங்கம்

பேட்டியின் போது ஒவ்வொருமுறையும், கட்சித் தலைமை தன்னை ஆலோசிப்பதில்லை என்றார். அமைச்சரவையில் இருந்து விலகப் போவதைக்கூட தன்னிடம் சொல்லாமல் செய்தனர் என்று குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியில் தன்னுடைய கல்லூரியை திறக்க விடாமல் செய்கின்றனர் என்றும் சொன்னார் அழகிரி.

English summary
DMK's southern region secretary M K Azhagiri has criticised the sacking of the functionaries of Madurai unit. And dubbed this as abortion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X