வாங்கண்ணா, வணக்கங்கண்ணா.. செங்கோட்டையனைப் பார்க்க.. ஓ.பி.எஸ். வீட்டுக்கு போயி.. அடடே அதிமுகவினர்!
சென்னை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனைப் பார்க்க வந்த கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள், வீடு தெரியாமல், ஓ.பி.எஸ் வீட்டுக்குப் போய் தர்மசங்கடத்துக்குள்ளாகினர்.
எல்லா மாவட்டங்களையும் போல கன்னியாகுமரியிலும் அதிமுக இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. இதில் சசிகலா பிரிவு அதிமுகவில் மாவட்டச் செயலாளராக இருப்பவர் விஜயக்குமார் எம்.பி. இவருக்கு அப்பிரிவினருக்குள் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. அவரை மாற்றக் கோரி சென்னகை்குப் படையெடுத்தனர்.
இதற்காக சென்னைக்கு வந்த அவர்கள் முதலில் தங்களது மாவட்டத்தைச் சேர்ந்த முன்னால் அமைச்சர் பச்சைமாலுடன் முதல்வரைச் சந்திக்க வந்தனர். அதிமுக நிர்வாகிகளையும் சந்தித்தனர்.

வாங்கண்ணா.. வணக்கங்கண்ணா!
இதையடுத்து கே.ஏ.செங்கோட்டையனை சந்திக்க முடிவு செய்த அவர்கள் அவரது வீட்டுக்குப் போனார்கள். ஆனால் தெரியாமல் அருகில் இருந்த ஓ.பி.எஸ் வீட்டுக்குப் போய் விட்டனர்.

நாங்க அண்ணனைப் பார்க்கனும்
வீட்டுக்குள் போன அவர்களிடம் வீட்டில் இருந்த ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் வரவேற்று உட்கார வைத்து என்ன விஷயம் என்று கேட்டபோது செங்கோட்டையனிடம் மனு கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.

அண்ணாச்சி தப்பா வந்துட்டீக!
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் அணி நிர்வாகிகள், நீங்க வந்திருப்பது ஓ.பி.எஸ் வீடு என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு ஜேர்க் ஆகிப் போன கன்னியாகுமரி கோஷ்டி அடடே, தப்பாப் போச்சே என்று பதறிப் போய் வேகமாக கிளம்பி வெளியே வந்து விட்டனராம்.

நமட்டுச் சிரிப்பில் கன்னியாகுமரி
அதன் பின்னர் செங்கோட்டையன் வீட்டுக்குப் போய் மனு கொடுத்து விட்டு வியர்க்க விறுவிறுக்க கிளம்பிப் போனார்களாம். யாருடைய வீடு எங்கே இருக்கிறது என்று கூட தெரியாமல் இவர்கள் நம்மை நீக்க மனு கொடுக்கிறார்களா என்று விஜயக்குமார் தரப்பு சிரித்தபடி உள்ளதாம்.


Click it and Unblock the Notifications
