கணவரைக் காண சசிகலாவுக்கு விருப்பமில்லை?.. பரோலுக்கு விண்ணப்பிக்கவில்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது கணவர் நடராஜனைக் காண சசிகலா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கணவரைக் காண்பதற்காக அவர் வர மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. காரணம், அவர் பரோலுக்கு விண்ணப்பிக்காமல் உள்ளார்.

சசியின் கணவர் நடராஜன் உடலில் என்ன பிரச்சினை?-வீடியோ

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த சில மாதங்களாகவே கல்லீரலில் பிரச்சினை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு

கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு

நடராஜனுக்கு கல்லீரல் மட்டுமல்லாமல் சிறுநீரகமும் சேர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறையில் சசிகலா

சிறையில் சசிகலா

சிறையில் சசிகலா

பரோல் கேட்கவில்லை

பரோல் கேட்கவில்லை

செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் கணவரை காண சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பித்திருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த செய்தியை கர்நாடக அ.தி.மு.க செயளாலர் புகழேந்தி மறுத்துள்ளார். சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

7 மாத சிறை வாசம்

7 மாத சிறை வாசம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பிப்ரவரி 15ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. 7 மாதங்களாக சிறையில் உள்ளார் சசிகலா. அவரது உறவினர்கள் இருவர் மரணமடைந்து விட்டனர். ஏப்ரல் மாதம் மகாதேவன் மரணமடைந்தார். சில வாரங்களுக்கு முன்னர் சசிகலாவின் அண்ணன் மனைவி சந்தானலட்சுமி மரணமடைந்தார். இந்த இரண்டு மரணத்திற்கும் பரோல் கேட்கவில்லை சசிகலா.

கணவர் விருப்பம்

கணவர் விருப்பம்

உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவரை காண சசிகலா வரவேண்டும் என்று உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதையேதான் நடராஜனும் விரும்புகிறாராம். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை உடனிருந்து கவனித்துக்கொண்டார் சசிகலா.

உறவினர்கள் விருப்பம்

உறவினர்கள் விருப்பம்

அதேபோல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை உடனிருந்து கவனிக்க சசிகலா பரோலில் வரவேண்டும் என்றே உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பரோலில் வருவதும் வராமல் போவதும் சசிகலாவின் கையில்தான் உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
According to the release, Mr. Natarajan had a history of chronic liver disease and was receiving treatment from Gleneagles Global Health City for the last six months. sources said Sasikala Natarajan will not move the Court seeking parole.
Please Wait while comments are loading...