For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையில் இருந்தபடியே ஆட்டி படைக்கிறார்.. சசிகலா கூட்டம் கொள்ளைகூட்டம்... பொறிந்து தள்ளிய ஜி.ஆர்

சிறையில் இருந்தபடியே சசிகலா கட்சியையும் ஆட்சியையும் ஆட்டிப்படைப்பதாக ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

கடலூர்: சசிகலா சிறையில் இருந்தபடியே கட்சியையும் ஆட்சியையும் ஆட்டிப்படைப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். சசிகலாவின் பின்னணியில் உள்ள கூட்டம் கொள்ளைக் கூட்டம் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் சாடினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியிள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது சசிகலா மற்றும் அவரது பின்னணியில் உள்ள அவரது குடும்பத்தினர் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார். சசிகலா சிறையில் இருந்தபடியே கட்சியையும் ஆட்சியையும் ஆட்டிப்படைப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் பேசியதாவது, "பருவ மழை பொய்த்துப்போனதால் தமிழகம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது, சாகுபடிகளை இழந்துவிவசாயிகள் நிவாரணத்திற்காக காத்துக் கிடக்கின்றனர்.

ஊழல் கொள்ளைக்காக போட்டி

ஊழல் கொள்ளைக்காக போட்டி

குடிநீருக்கு கூட பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டிய அரசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டும், லஞ்சத்திற்காகவும், ஊழல் கொள்ளைக்காகவும் ஓபிஎஸ், இபிஎஸ் என அதிகாரப் போட்டியிட்டு சண்டைப்போட்டுகொண்டு இருக்கின்றனர். இவர்களை அம்பலப்படுத்திட, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நலன் காக்கும் கொள்கைகளை முன் வைத்துதான் இந்த பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது.

அப்போதே ரிமோட் கன்ட்ரோலாக இருந்தவர்

அப்போதே ரிமோட் கன்ட்ரோலாக இருந்தவர்

முதல்வர் இறந்த பிறகு கவுன்சிலர் பொறுப்பு கூட இல்லாதவருக்கு பொதுச்செயலாளர்,முதல்வர் பதவிக்கு ஏன் இவ்வளவு அவசரம். முதல்வர் இருந்தபோதே ஆட்சி நிர்வாகத்தை ரிமோட்கன்ட்ரோலாக செயல்படுத்தியவர் தான் இவர். தமிழகத்தில் கடும் வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரத்தை கைப்பற்றப் போட்டி

அதிகாரத்தை கைப்பற்றப் போட்டி

இந்த மாவட்டத்தில் 20 விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர், ஒரு குடம் தண்ணீர் ரூ5க்கு விற்கபடுகிறதே இதற்கு நடவடிக்கை எடுக்க அவசரம் காட்டாமல் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவும்,அதிகாரத்தை கைபற்றவும் சசி,ஓபிஎஸ்,இபிஎஸ் என போட்டி போட்டுகொண்டு அவசரம் காட்டுகிறார்கள்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம் ஏற்படபோகிறது. இந்தியாவிலே அதிக மருத்துவக் கல்லூரி உள்ள மாநிலம் தமிழ்நாடு. தற்போது சட்டம் போட்டு ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்காத வகையில் செய்வது மிகவும் கவலைக்குறியது. இதைபற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை. ஒரே கவலை கட்சியையும்,ஆட்சியையும் கைபற்றி கொள்ளையடிப்பது தான் குறிக்கோள். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என 4 பேரும் குற்றவாளிகள் என்ற நீதிபதிகளின் தீர்ப்பு பாராட்டுக்குறியது.

ஆட்சியையும்,கட்சியையும் ஆட்டி படைக்கிறார் சசி

ஆட்சியையும்,கட்சியையும் ஆட்டி படைக்கிறார் சசி

சிறையில் இருந்து கொண்டே ஆட்சியையும்,கட்சியையும் ஆட்டி படைக்கிறார். சசி பின்னணியில் உள்ள கூட்டம் கொள்ளைகூட்டமாக செயல்படுகிறது. இப்போதுள்ள பிரச்சனையில் பிஜேபி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சி செய்தது. சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்துவைத்து பெரும்பான்மை நிருபித்தது ஜனநாயகம் இல்லை.

ஓபிஎஸ் மீதும் பாய்ச்சல்

ஓபிஎஸ் மீதும் பாய்ச்சல்

ஓபிஎஸ் என்ன நேர்மையானவரா? இவருக்கு பிணாமியாக இருந்த சேகர்ரெட்டி வீட்டில் 100கிலோ தங்கம்,பல கோடி ரொக்கம் கைபற்றப்பட்டது. கொள்ளைகளில் இரு கோஷ்டிக்கும் வித்தியாசம் இல்லை.

மார்க்சிஸ்ட் கட்சி தான் மாற்று

மார்க்சிஸ்ட் கட்சி தான் மாற்று

பிப்17ந்தேதி வரை ஸ்டாலின் எடுத்த முடிவுகள் சரியாக இருந்தது. அவர்கள் சட்டசபையில் செய்த நடவடிக்கையை யாரும் ஆதிரிக்கவில்லை. ஓபிஎஸ்க்கு மாற்று இபிஎஸ்,திமுகவோ இல்லை இவர்கள் ஊழல் கொள்ளை,என்ற ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள். மக்கள் நலன் காக்க மாற்றுக்கொள்கைகளை முன்வைத்து போராடும் மார்க்சிஸ்ட் கட்சி தான் மாற்று. இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

English summary
CPM state secretary G.Ramakirishnan says that Sasikala ruling party and tamil nadu government from jail. Team behind Sasikala are the theives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X