For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா மீது புகார் கொடுத்தவர்களின் விவரங்களை அளிப்பாரா ஆறுமுகசாமி?... ராஜாசெந்தூர் பாண்டியன் ஆஜர்

சசிகலா மீது புகார் கொடுத்தவர்களின் விவரங்களை நீதிபதி ஆறுமுகசாமி அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆறுமுகசாமி கமிஷன் முன்பு ஆஜரான சசிகலா வழக்கறிஞர்- வீடியோ

    சென்னை: சசிகலா மீது புகார் கொடுத்தவர்களின் விவரங்களை கேட்டு பெற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு ஆஜராகியுள்ளார். அந்த விவரங்களை கொடுத்தால் மட்டுமே தன்னிடம் உள்ள ஆவணங்களை கொடுக்க முடியும் என்று சசிகலா தெரிவித்துவிட்டார்.

    ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நல பாதிப்புகளால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்கு பிறகு, டிசம்பர் 5-ஆம் தேதி இறந்துவிட்டார்.

    Sasikala's advocate Raja Senthur Pandiyan appears before Arumugasamy commission

    அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அவர் தனது விசாரணையை கடந்த நவம்பர் மாதம் தொடங்கினார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர்கள், அரசின் முன்னாள் இன்னாள் அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளார். இது வரை 20 பேரிடம் விசாரணை நடத்திவிட்டார்.

    இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடத்த டிசம்பர் 21-ஆம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு இமெயில் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் உள்ள ஆவணங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். ஆனால் தனக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே உள்ள நட்பை கொச்சைப்படுத்தும் விதமாக தன் மீது புகார் கொடுத்தவர்கள் யார் என்ற விவரங்களை கூறினால் மட்டுமே தன்னால் ஆவணங்களை ஒப்படைக்க முடியும் என்றும் கமிஷன் முன்பு ஆஜராக முடியும் என்றும் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மூலம் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி மனுவில் தெரிவித்திருந்தார்.

    மேலும் தகவல்கள் கிடைத்த 15 நாட்களுக்கு தன்னிடம் உள்ள ஆவணங்களை ஒப்படைப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு ஆறுமுகசாமி ஒப்புக் கொண்டுள்ள நிலையில் சசிகலா தரப்பு சார்பில் மேலும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜன 12-ஆம் தேதி இதுவரை விசாரித்தவர்களிடம் தங்கள் தரப்பும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று கோரினர். ஆனால் அவ்வாறு நடத்தினால் வழக்கு முடிய இன்னும் 15 ஆண்டுகள் ஆகும். எனவே இனி வரும் சாட்சிகளை விசாரிக்கும்போது உடனிருந்து குறுக்கு விசாரணை செய்யலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த சூழலில் ராஜா செந்தூர் பாண்டியன் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் இன்று ஆஜராகினார். சசிகலா தரப்பினரின் இரு கோரிக்கைகளை நிறைவேற்ற நீதிபதி ஒப்புக் கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Sasikala's advocate Raja Senthur Pandiyan appears before arumugasamy commission regarding to get the details of who complaints against Sasikala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X