ஜெயலலிதா மரண விசாரணை- சசிகலா உதவியாளர் ஆஜர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி கமிஷன் முன்பு ஆஜராகியுள்ளார்.

ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.

Sasikala's secretary Karthikeyan appears before Arumugasamy commission

இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் நிலவியதால் தமிழக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெ.வுடன் நெருங்கி இருந்த அதிகாரிகள் என 20-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் இன்று ஆஜராக கமிஷன் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அவர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala's secretary Karthikeyan appears before the Arumugasamy Commission who hears Jayalalitha's death case.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற